ரூ.3 கோடி மதிப்புடைய ஆடி கார் மணி வாடகைக்கு... விபரம்!

Written By:

பல லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்கினால் கூட ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டி பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பலரிடம் இருப்பது இயல்பு. ஆனால், அதன் பல கோடி விலையும், பராமரிப்பு செலவும் பலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டி பார்க்கும் ஆவல் கொண்டவர்களின் கனவை பூர்த்தி செய்யும் விதத்தில் மிக குறைவான கட்டணத்தில் ஆடி ஸ்போர்ட்ஸ் கார் வாடகைக்கு கிடைக்கிறது.

இங்கல்ல...

இங்கல்ல...

டெல்லியை சேர்ந்த Eco Rent a Car என்ற நிறுவனம்தான் ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் காரை வாடகைக்கு விடுகிறது.

கட்டணம்

கட்டணம்

மணிக்கு ரூ.5,000 என்று வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் கனவை நிறைவேற்றுவதற்கு இந்த தொகை ஒன்றும் பெரிதாக கருத முடியாது.

உள்குத்து கட்டணம்

உள்குத்து கட்டணம்

அதாவது, ஒரு மணிநேரத்திற்கு ரூ.5,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதிகபட்சமாக 10 கிமீ தூரம் வரை மட்டுமே செல்ல முடியும். அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.300 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதுமட்டுமில்லை...

அதுமட்டுமில்லை...

கட்டணம் மிக குறைவாக இருந்தாலும், டெபாசிட் தொகையாக ரூ.2 லட்சம் உங்களது கிரெடிட் கார்டிலிருந்து பிடித்தம் செய்யப்படும். காரை திரும்ப ஒப்படைத்தவுடன், அந்த தொகை மீண்டும் உங்களது கிரெட்டி கார்டில் வரவு வைக்கப்படும்.

பவர்ஃபுல் கார்

பவர்ஃபுல் கார்

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் காரில் இருக்கும் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும். எனவே, இந்த காரை கட்டுப்படுத்துதே ஒரு த்ரில்லாக அமையும்.

செயல்திறன்

செயல்திறன்

ஆக்சிலரேட்டரை கொடுத்தவுடன், குதிரை போல அல்ல. அதனையும் விஞ்சிய திறனை வெளிப்படுத்தும். அதாவது, 0- 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் என்பதையும் மனதில் கொள்க.

ஒரே யோசனை...

ஒரே யோசனை...

5,000 ரூபாய் வாடகை பிரச்னை இல்லை, ஆனால், அந்த 2 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டில் வேண்டுமே என்பவர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்டு கார்டு ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். சமீபத்தில் இந்த கார்டை விடாப்பிடியாக கொடுத்த போது நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

செல்ஃபிக்காவது உதவும்...

செல்ஃபிக்காவது உதவும்...

அடித்து பிடித்து இந்த காரை முன்பதிவு செய்து ஓட்டுவதோடு, செல்ஃபியும் இஷ்டம் போல எடுத்துக் கொள்ளலாம். வாழ்நாள் கனவு பாருங்க...!!

விலை

விலை

இந்தியாவில் ரூ.2.47 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்ரோடு விலை ரூ.3 கோடியை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
English summary
Audi R8 Sports Car Available For Rent In India.
Story first published: Thursday, May 12, 2016, 12:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark