ஏர்பேக்குகளில் கோளாறு: 22,000 கார்களை ரீகால் செய்கிறது ஆடி

Written By:

ஏர்பேக்கில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, ஆடி ஏ3, ஏ6 மற்றும் ஏ7 சொகுசு கார்கள் திரும்ப அழைக்கபடுகிறது.

முதல் கட்டமாக, 21,074 கார்கள் ரீகால் செய்யபடுகிறது. இவற்றில், மார்ச் 28, 2011 முதல் மார்ச் 25, 2013 வரையிலான தேதிகளுக்கு இடையே தயாரிக்கபட்ட ஏ6 செடான்களும், ஜனவரி 25, 2011 முதல் மார்ச் 19, 2013-ஆம் தேதிகளுக்கு இடையே தயாரிக்கபட்ட ஏ7 செடான்களும் அடங்கும்.

ஹீட்டட் ஸீட்கள் மற்றும் கூல்ட் ஸீட்கள் கொண்ட இந்த செடான்களில், பாஸன்ஜர் ஆக்குபண்ட் டிடெக்‌ஷன் சிஸ்டம் செயலிழந்து, கிராஷ் (விபத்து) நடைபெறும் சமயத்தில், பாஸன்ஜர் சைட் ஏர்பேக்கு செய்படாத நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த கோளாறுகள் கொண்ட கார்களை வாடிக்கையாளர்கள் டீலர்ஷிப்களிடம் கொண்டு சென்று, சரியாக செயல்படாத ஏர்பேக்குகளை மாற்றி கொள்ளலாம்.

audi-recall-almost-22-000-a3-a6-a7-due-to-faulty-side-airbags-issue

மேலும், ஜூன் 5, 2014 முதல் ஏப்ரல் 1, 2015 இடையிலான காலகட்டத்தில் தயாரிக்கபட்ட 903 ஏ3 கன்வெர்டிபிள் கார்களையும் ஆடி நிறுவனம் ரீகால் செய்ய உள்ளது. இவையும், சைட் ஏர்பேக் கோளாறு காரணமாகவே திரும்ப பெறப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட 903 ஏ3 கன்வெர்டிபிள் கார்களில், டிரைவர் சீட் கவர்கள் மற்றும் ஃப்ரண்ட் பாஸன்ஜர் சீட்களின் சரியில்லாத தையல் வேலைபாடுகளால், அவசர காலத்தில் இந்த ஏ3 கன்வெர்டிபிள் கார்கள் ஒழுங்காக செயல்படுவதில்லை.

பாதிக்கபட்ட சீட் கவர்கள் கொண்ட இந்த கார்களை டீலர்களிடம் கொண்டு சென்றால், அவர்கள் இதை மாற்றி தருவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

English summary
Audi would recall almost 22,000 A3, A6 and A7 regarding issues with the Side Airbags. To be precise, Audi is recalling 21,978 units of the A7, A6 and A3 sedans in two different campaigns related side airbags issues. Customers are asked to take their cars with faults to the dealerships for the malfunctioning units to be replaced.
Story first published: Monday, January 4, 2016, 13:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more