தானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸின் சோதனை, ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது

Written By:

ஆஸ்திரேலியாவில், இண்டெல்லிபஸ் எனப்படும் டிரைவர் இல்லா தானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸின் முதல் சோதனை ஓட்டம் எந்த சிக்கல்களும் இல்லாமல், வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் சோதிக்கப்பட்ட தானியங்கி எலக்ட்ரிக் பஸ் பற்றிய தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இண்டெல்லிபஸ்;

இண்டெல்லிபஸ்;

சமீப காலமாக, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் தானியங்கி வாகனங்களின் உபயோகம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கு ஆஸ்திரேலிய அரசு, இண்டெல்லிபஸ் என்ற டிரைவர் இல்லா தானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸின் முதல் சோதனை, எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

உருவாக்கம்;

உருவாக்கம்;

இந்த இண்டெல்லிபஸ், ஆர்ஏசி (RAC) என்ற அமைப்பு மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய அரசின் முயற்சியினால் சாத்தியமானது.

இந்த இண்டெல்லிபஸ், நவ்யா எஸ்ஏஎஸ் (Navya SAS) என்ற பிரான்ஸை சேர்ந்த நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

வேகம்;

வேகம்;

இண்டெல்லிபஸ் சராசரியாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையதாகும்.

இண்டெல்லிபஸ், உச்சபட்சமாக மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையதாக உள்ளது.

பயணம்;

பயணம்;

இண்டெல்லிபஸ், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள சார் ஜேம்ஸ் மிட்ஷெல் பார்க் (Sir James Mitchell Park) மற்றும் ஓல்ட் மில் (Old Mill) என்ற இரு இடங்களுக்கு மத்தியில் இயக்கப்படுக்கிறது.

இந்த இரு ஸ்தலங்களுக்கும் இடையிலான பயண நேரம் 25 நிமிடங்ககளாக உள்ளது.

கொள்ளளவு;

கொள்ளளவு;

இந்த இண்டெல்லிபஸ்ஸில், ஒரு நேரத்தில் சுமார் 15 பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும்.

வசதிகள்;

வசதிகள்;

இந்த இண்டெல்லிபஸ்ஸில் எக்ஸ்டர்னல் கேமரா எனப்படும் வெளிப்புற கேமரா, ஜிபிஎஸ், எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 2டி மற்றும் 3டி லிடார் வசதிகள் உள்ளது.

ஆர்ஏசி கருத்து;

ஆர்ஏசி கருத்து;

இண்டெல்லிபஸ்ஸில் உள்ளது போன்ற தொழில்நுட்பம், தற்போதைய கார்களிலும் உள்ளது.

ஆனால், இண்டெல்லிபஸ்ஸில் முன்பு குறிப்பிட்ட அனைத்து தொழில்நுட்பங்கலும் ஒன்று சேர்ந்து முழுமையான தானியங்கி வாகனமாக மாற்றுகிறது.

சோதனை ஓட்டம்;

சோதனை ஓட்டம்;

இந்த இண்டெல்லிபஸ்ஸின் அடுத்த 3 வாரங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டெல்லிபஸ்ஸில் மேற்கொள்ளப்படும் பயணம் மிகவும் விலை குறைவானதாக உள்ளது. பொதுமக்கள் இந்த இண்டெல்லிபஸ்ஸில் பயணம் மேற்கொள்ள ஆர்ஏசி இணையதளத்தில் (RAC's website) சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிரைவர் துணையின்றி பயணித்து அசத்திய மெர்சிடிஸ் பென்ஸ் தானியங்கி பஸ்!

முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார பஸ்!

புதிய எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்திய அசோக் லேலண்ட்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Western Australian government has successfully completed very first trial run of fully electric, driverless Autonomous bus in Perth. This bus named as Intellibus, is an initiative taken by RAC and Government of Western Australia. Intellibus is built by French company, called Navya SAS. Intellibus is capable of carrying 15 passengers. To know more, check here...
Story first published: Thursday, September 1, 2016, 16:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark