இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கார்களை வாடகைக்கு விடும் திட்டம்: 168 நாடுகளில் தொடங்குகிறது ஆவிஸ் நிறுவனம்...

Written By: Krishna

ஓய்வுக்க்காகவோ அல்லது பணி நிமித்தமாகவோ வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏறத்தாழ அனைவருக்கும் கிடைக்கும். புதிய ஊர், புதிய மொழி என அனைத்தும் நமக்கு அந்நியப்பட்டதாய் இருக்கும்.

ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களை நம்ப இயலாது. ஊரின் விவரங்கள் தெரியாததால், ரூ.50 செலவு ஆக வேண்டிய தூரத்துக்கு ரூ.500 வாங்கி ஏமாற்றி விடுவார்கள். ஒவ்வொரு முறையும் இப்படி காசை இழக்க நேர்ந்தால், சொந்த ஊருக்குத் திரும்பி வரும் போது உங்கள் பர்ஸ் சிசேரியன் செய்யப்பட்ட மாதிரித்தான் இருக்கும்.

கார் வாடகை

இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் கார்களை வாடகைக்கு விடும் ஆவிஸ் இந்தியா நிறுவனம். டிரைவருடன் கூடிய கார் அல்லது செல்ஃப் - டிரைவ் கார் என எதை வேண்டுமானாலும் நீங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால், அந்நிறுவனம் இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கிறது.

சுமார் 168 நாடுகளில் தனது சேவையை வழங்கி வருகிறது ஆவிஸ் நிறுவனம். இந்த நிலையில் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள், முகவர்களுடன் இணைந்து புதிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட ஆவிஸ் திட்டமிட்டுள்ளது.

அதன் மூலம் இரு தரப்புக்கும் பரஸ்பரம் பயன் கிடைக்கும் எனக் கூறுகிறது ஆவிஸ் நிறுவனம். அதாவது சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்களோ அல்லது முகவர்களோ, ஆவிஸ் இந்தியாவுடன் இணைந்து பயணிகளுக்கு செல்ஃப் - டிரைவிங் கார் சேவை வழங்கலாம்.

ஆண்டொன்றுக்கு 2 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், இந்தியப் பயணிகளுக்கு 168 நாடுகளில் இந்தச் செல்ஃப் டிரைவிங் வாடகை கார் சேவையை சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் வழங்கலாம். கண்டங்கள் கடந்தும் இந்திய நிறுவனங்களின் சேவை அவர்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சிதானே. அதைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது ஆவிஸ் நிறுவனம்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களும், முகவர்களும் அறி்ந்து கொள்ள +124-4724888 என்ற தொலைபேசி எண்ணையோ globalselfdrive@avis.co.in என்ற இணையதள முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என்று ஆவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Avis Introduces Global Self Drive In 168 Countries For Indian Travellers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark