கிராஷ் டெஸ்ட்டில் மாருதி ஆல்ட்டோ காரைவிட சிறப்பான மதிப்பீடு பெற்ற பஜாஜ் க்யூட்!

Written By:

இருசக்கர, மூன்று சக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிறிய ரக நான்குசக்கர வாகனம் ஒன்றை கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்தது. குவாட்ரிசைக்கிள் என்று குறிப்பிடப்படும் ரகத்தில் நகர்ப்புற பயன்பாட்டு வாகனமாக இது தெரிவிக்கப்பட்டது.

தற்போது நகர்ப்புறத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோரிக்ஷாக்களுக்கு மாற்றாக இதனை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டது. ஆனால், இந்த வாகனத்தை விற்பனைக்கு விடுவதற்கான அரசு அனுமதி பெறுவதற்கு முடியாமல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திண்டாடி வருகிறது.

வெளிநாடுகளில் வரவேற்பு

ஆனால், ரஷ்யா, இந்தோனேஷியா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை 334 பஜாஜ் க்யூட் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அயல்நாடுகளில் வரவேற்பு அதிகரித்ததால், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மாதத்திற்கு 500 க்யூட் வாகனங்கள் என்ற இலக்குடன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

மோதல் சோதனை

இந்த நிலையில், பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் சோதனை நடத்தியது. அதில், முன்புற மோதல் சோதனையில் பஜாஜ் க்யூட் வாகனத்தின் முன்புற கட்டுமானம் நிலையானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பக்க வலிமை

மேலும், உடல்கூடு பாகங்களை இணைப்பதற்கான வெல்டுகளும் மோதலின்போது விட்டுப்போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் உடல்கூடின் தாங்கும் வலிமையும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளது.

ஏர்பேக் இல்லாத மாடல்

முன்புற மோதல் சோதனையில் பயன்படுத்தப்பட்ட பொம்மை மனிதனின் தலை மோதலின்போது ஸ்டீயரிங் வீல் மீது மோதியதாகவும், ஏர்பேக் இல்லாத நிலையில், இதுபோன்று விபத்தில் சிக்கும்போது ஓட்டுனரின் தலையில் பலத்த காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டு பலம்

பக்கவாட்டு மோதல் சோதனையில் ஏ பில்லரில் இருக்கும் முன்புற கதவு கழற்றுகொண்டது. மேலும், பக்கவாட்டு ஏர்பேக்குகள் இல்லாத நிலையில், பயணிப்பவர்களுக்கு மார்பு பகுதி, இடுப்புப் பகுதி, முழங்கால் எலும்புகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எவ்வளவு மார்க்?

இதனால், பயணிகளுக்கு கடுமையான காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், பயணிகளின் கழுத்துப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி பாதுகாப்பு ஓரளவு நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, குளோபல் என்சிஏபி அமைப்பு சோதனையில் 5க்கு 1 என்ற நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

ஆல்ட்டோவைவிட பெட்டர்

இந்த நிலையில், டாடா நானோ, மாருதி ஆல்ட்டோ உள்ளிட்ட முன்னணி கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் சோதனையில் தர மதிப்பீட்டில் பூஜ்யத்தை பெற்ற நிலையில், பஜாஜ் க்யூட் வாகனம் ஒரு நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருப்பது குறிப்பிட்டத்தக்கது.

மேம்படும் பாதுகாப்பு தரம்

நம் நாட்டின் மற்றொரு தயாரிப்பான டாடா ஸெஸ்ட் கார் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் தீவிரம் காட்டுவது புலப்படுகிறது.

English summary
Bajaj Qute has been given one star Global NCAP rating during the recent rounds of crash testing.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark