பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளுக்கு யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், 1 ஸ்டார் ரேட்டிங்

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் கியூட் குவாட்ரிசைக்கிள், யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் 1 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றது.

கியூட் குவாட்ரிசைக்கிள் குறித்தும், பாதுகாப்பு சோதனையில் அது பெற்ற மதிப்பீடு குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் கியூட்...

பஜாஜ் கியூட்...

கார் போன்ற தோற்றம் கொண்ட பஜாஜ் கியூட், குவாட்ரிசைக்கிள் வகையை சேர்ந்ததாகும்.

எடை, பவர் மற்றும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பஜாஜ் கியூட் மோட்டார் பொருத்தபட்ட குவாட்ரிசைக்கிளாக உள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில், பூனே அருகே சகன் என்ற இடத்தில் அமைக்கபட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவன உற்பத்தி ஆலையில் தயார் செய்யபடுகிறது.

கிராஷ் டெஸ்ட்;

கிராஷ் டெஸ்ட்;

எந்த ஒரு தயாரிப்புகளும், விபத்து நிகழும் நேரத்தில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை ஆராய, அவை கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபடுகிறது.

அதன் பிறகு, சோதிக்கபடும் வாகனங்களுக்கு 1 ஸ்டார், 2 ஸ்டார் என மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், குளோபல் என்கேப் (GLOBAL NCAP), ஆசியான் என்கேப் (ASEAN NCAP), யூரோ என்கேப் (EURO NCAP) என பல்வேறு வகையிலான கிராஷ் டெஸ்ட்கள் உள்ளன.

யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்;

யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்;

யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட் என்பது ஐரோப்பிய பிராந்தியங்களுக்கு மையபடுத்தி நடத்தபடும் கிராஷ் டெஸ்ட் ஆகும்.

இந்த பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளும், சமீபத்தில் யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தபட்டது.

ஃபிராண்டல் கிராஷ்;

ஃபிராண்டல் கிராஷ்;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள், யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், ஃபிராண்டல் கிராஷ் எனப்படும் முன் திசையை நோக்கியவாறு மோதலுக்கு உட்படுத்தபட்டது.

இந்த வகையிலான சோதனை, மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் நடத்தபட்டது.

1 ஸ்டார் ரேட்டிங்;

1 ஸ்டார் ரேட்டிங்;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள், உட்படுத்தபட்ட போது, 1 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றது.

இந்த யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டை அடுத்து, விபத்துகள் நிகழும் சந்தர்ப்பங்களில் பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளில் செல்லும் பயணியர்களின் உயிர் மிகுந்த ஆபத்துகளுக்கு உள்ளாக கூடிய நிலையில் உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. முன்னதாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்த கியூட் குவாட்ரிசைக்கிள் மிகுந்த பாதுகாப்பானது கூறி வந்தது.

எடை;

எடை;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள் வெரும் 450 கிலோகிராம் என்ற மிக குறைந்த அளவிலான எடை கொண்டுள்ளது.

இது தற்போது சந்தையில் உள்ள மிகச்சிறிய காரை காட்டிலும், 37% எடை குறைவானதாக உள்ளது. எடை குறைவாக உள்ளதால், இது மிகுந்த எரிபொருள் மிக்க வாகனமாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் கியூட் கார், வாட்டர்-கூல்ட், டிஜிட்டல் ட்ரை-ஸ்பார்க் இக்னிஷன், 4-வால்வ் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது குளோஸ்ட் (மூடிய) லூப் ப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டம் கொண்டுள்ளது.

இந்த சிஸ்டம் கொண்டுள்ளதால், பஜாஜ் கியூட் கார் உயர்ந்த செயல்திறன் மற்றும் கண்ட்ரோல் கொண்டுள்ளது.

எளிமையான வாகனம்;

எளிமையான வாகனம்;

பஜாஜ் கியூட் கார், 3.5 மீட்டர் என்ற மிக குறைந்த அளவிலான, டர்னிங் சர்கிள் ரேடியஸ் (திரும்பும் ஆரம்) கொண்டுள்ளது.

இதனால், இந்த பஜாஜ் கியூட் கார் மிக எளிதாக திரும்பவும், நகர பகுதிகளில் மிக சுலபமாக இயக்க முடிகிறது.

4-ஸீட்டர்;

4-ஸீட்டர்;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள், 1 டிரைவர் மற்றும் 3 பயணியர்கள் உட்பட 4 பேர் பயணிக்கும் வகையில் உள்ளது.

கொள்ளளவு;

கொள்ளளவு;

ஃமுன்பகுதி - 60 லிட்டர்

மையபகுதி - 95 லிட்டர்

பின்பகுதி - 44 லிட்டர்

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கொள்ளளவு - 216.6 சிசி

சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வேரியண்ட்களில் கிடைக்கிறது

உச்சபட்ச பவர் - 13.2 பிஎஸ்

செயல்திறன்;

செயல்திறன்;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள், உச்சபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள், மோட்டார்சைக்கிள்களில் உள்ளது போல், சீக்வென்ஷியல் கியர் ஷிஃப்ட் முறைகளை கொண்டுள்ளது.

ஃபார்வார்ட் கியர் - 5

ரிவர்ஸ் கியர் - 1

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

நீளம் - 2752 மில்லிமீட்டர்

அகலம் - 1312 மில்லிமீட்டர்

உயரம் - 1652 மில்லிமீட்டர்

வீல் பேஸ் - 1925 மில்லிமீட்டர்

வீல் டிராக் - 1143 மில்லிமீட்டர்

டர்னிங் சர்கிள் ரேடியஸ் - 3.5 மீட்டர்

பாதுகாப்பு ஒப்பீடு;

பாதுகாப்பு ஒப்பீடு;

பஜாஜ் கியூட், பாதுகாப்பு விஷயத்தில், ஃபோக்ஸ்வேகன் போலோ, டாடா நேனோ மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ ஆகிய மாடல்களுடன் ஒப்பிடபட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் பதில்;

ஃபோக்ஸ்வேகனின் பதில்;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளின் ஒப்பீடிற்கு, இந்தியாவிற்கான போலோ மாடல் பாதுகாப்பிற்கான 4-ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளது என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

போட்டி;

போட்டி;

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிள், சர்வதேச அளவில், ரெனோ ட்விஸ்ஸி உள்ளிட்ட பல்வேறு மாடல்களுடன் போட்டி போட வேண்டி உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சர்வதேச பாதுகாப்பு தரம் இல்லாத கார்களுக்கு அஸ்ஸாம் அரசு அதிரடி தடை!!

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஃபோர்டு என்டெவர்!

கிராஷ் டெஸ்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளுக்கு யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளுக்கு யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்

பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளுக்கு யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்

English summary
Bajaj Qute quadricycle from Bajaj Auto was recently subjected to crash test under EURO NCAP Crash Test. Bajaj Qute received One Star in EURO NCAP Crash Test. In EURO NCAP, Qute was subjected to frontal crash test at speed of 50 km/h. Qute is a motorised quadricycle. Qute weighs under 450kgs - 37% lighter than smallest car. To know more, check here...
Story first published: Thursday, April 14, 2016, 13:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more