இந்திய சாலைகளுக்கு ஏற்ற அதிக தரை இடைவெளி கொண்ட கார் மாடல்கள்!

Written By:

சாலை கட்டமைப்பு தரம் இந்தியாவில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், நெடுஞ்சாலைகள் கூட போதிய பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையை எட்டிவிடுகின்றன.

மேலும், சில சாலைகளில் அவ்வப்போது வரும் ராட்சத வேகத்தடைகளும் காரை பதம் பார்த்துவிடும் அபாயத்தில் உள்ளன. இந்த நிலையில், இந்திய சாலைகளுக்கு ஏற்ப அதிக தரை இடைவெளி கொண்ட கார் மாடல்களை செக்மென்ட் வாரியாக இந்த செய்தியில் காணலாம்.

 இந்திய சாலைகளுக்கு ஏற்ற அதிக தரை இடைவெளி கொண்ட கார் மாடல்கள்!

மோசமான சாலைகளை எதிர்கொள்ள தரை இடைவெளியை மட்டும் வைத்து கணக்கிட இயலாது. இரண்டு ஆக்சில்களுக்கு இடையிலான வீல் பேஸ் அளவு மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பை பொறுத்துதான் சிறந்தவையாக கருத முடியும். அந்த வகையில், இந்திய சாலைகளுக்கு ஏற்ற அதிக தரை இடைவெளி மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புடைய ஒவ்வொரு செக்மென்ட்டிலும் தலா இரண்டு மாடல்களை தந்துள்ளோம்.

 டட்சன் ரெடிகோ

டட்சன் ரெடிகோ

டட்சன் ரெடிகோ கார் 185 மிமீ தரை இடைவெளி கொண்டது. அத்துடன் விலை மிகவும் குறைவான கார் மாடல். இதன் வீல் பேஸ் 2,348மிமீ ஆக இருப்பதும் மோசமான சாலைகளை எளிதில் எதிர்கொள்ள உதவும். எமது டெஸ்ட் டிரைவின்போது இந்த கார் மோசமான சாலைகளில் கூட எளிதாக கையாள உதவியது.

ரெனோ க்விட்

ரெனோ க்விட்

அனைத்து விதத்திலும் சிறப்பான மாடல் ரெனோ க்விட். இந்த கார் 180மிமீ தரை இடைவெளி கொண்டிருப்பதுடன் 2,422 மிமீ வீல் பேஸ் கொண்டது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பும் சிறப்பாக இருப்பதால் அனைத்து சாலைகளையும் எளிதாக எதிர்கொள்கிறது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

நடுத்தர வகை ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார் ஃபோர்டு ஃபிகோ. இந்த கார் 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருப்பதும், ஃபோர்டு நிறுவனத்தின் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பும் உறுதுணையாக இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டொயோட்டா லிவா ஆகிய இரு கார்களும் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கின்றன. இதில், பிற அம்சங்களையும் சேர்த்து பார்க்கும்போது மாருதி ஸ்விஃப்ட் மிகச் சிறப்பான தேர்வாக அமையும். கையாளுமையிலும் சிறப்பாக இருக்கும்.

ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் புன்ட்டோ எவோ

உயர்வகை ஹேட்ச்பேக் கார்களில் ஃபியட் புன்ட்டோ எவோ கார் சிறப்பானதாக கூறலாம். இந்த கார் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதுடன், வலுவான கட்டமைப்பையும் சிறந்த சஸ்பென்ஷனையும் பெற்றிருக்கிறது.

மாருதி பலேனோ

மாருதி பலேனோ

மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய இரு கார் மாடல்களுமே 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கின்றன. வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இரண்டுமே சிறப்பான தேர்வாக கூறலாம்.

 டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட்

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் குவிந்துவிட்டன. அதில், டாடா ஸெஸ்ட் கார் சிறப்பான கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. இந்த கார் 175மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால், எந்தவொரு சாலைகளையும் எளிதாக எதிர்கொள்ளும்.

ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு ஆஸ்பயர் கார் 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. அத்துடன் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பும் இந்த காருக்கு கூடுதல் வலுசேர்க்கும் அம்சம். அடுத்ததாக, மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

 ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

நடுத்தர வகை செடான் கார் மார்க்கெட்டில் ஃபியட் லீனியா கார் 185மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் முன்னிலை பெறுகிறது. செயல்திறன், வலுவான கட்டுமானம் போன்ற வேறு சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் கார் பிரியர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றிருக்கிறது.

மாருதி சியாஸ்

மாருதி சியாஸ்

மாருதி சியாஸ் கார் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வருகிறது. இந்த செக்மென்ட்டில் அனைத்து விதத்திலும் சிறப்பானதாக இருக்கிறது. அடுத்ததாக ஹோண்டா சிட்டி கார் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும், வாடிக்கையாளர்களின் விருப்பமான மாடலாகவும் வலம் வருகிறது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா கார் 185மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. வீல் பேஸ், சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் சிறப்பான தரை இடைவெளி ஆகியவற்றின் மூலமாக நம் நாட்டு சாலைகளுக்கு ஏற்ற எம்பிவி காராக விளங்குகிறது.

 ஹோண்டா பிஆர்வி

ஹோண்டா பிஆர்வி

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹோண்டா பிஆர்வி காரும் சிறந்த கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டுள்ளது. இந்த கார் 210மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக இருப்பதுடன், சிறப்பான சஸ்பென்ஷனையும் பெற்றிருக்கிறது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

அடுத்து ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 200மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாகவும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 198மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் விற்பனையில் உள்ளன. விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் 190மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

 இந்திய சாலைகளுக்கு ஏற்ற அதிக தரை இடைவெளி கொண்ட கார் மாடல்கள்!

உங்கள் அபிமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 176மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாகவும், ரெனோ லாட்ஜி கார் 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் உள்ளன.

 இந்திய சாலைகளுக்கு ஏற்ற அதிக தரை இடைவெளி கொண்ட கார் மாடல்கள்!

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மிக அதிகபட்சமாக 240மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 இந்திய சாலைகளுக்கு ஏற்ற அதிக தரை இடைவெளி கொண்ட கார் மாடல்கள்!

வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி 225மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும், டொயோட்டா ஃபார்ச்சூனர் 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் உள்ளன.

English summary
Here are the cars and SUVs from each segment with the best ground clearance in India.
Story first published: Saturday, December 17, 2016, 13:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark