பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடான் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

3 சீரிஸ் ஜிடி

3 சீரிஸ் ஜிடி

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி (கிரான் டூரிஸ்மோ), ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபுள்யூ நிறுவனம் தயாரித்து வழங்கும் செடான் ஆகும். பொலிவு கூட்டப்பட்ட இந்த புதிய செடான், மேம்படுத்தப்பட்ட தோற்றம் மற்றும் புதிய இஞ்ஜின் தேர்வுகள் கொண்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடான், 2 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இஞ்ஜின் - 1;

இஞ்ஜின் - 1;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் 320டி ஜிடி செடானின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், 187 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜின் - 2;

இஞ்ஜின் - 2;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் 330ஐ ஜிடி செடானின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின், 248.5 பிஹெச்பியையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடானின் 2 இஞ்ஜின்களும், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடான், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.7 நொடிகளில் எட்டிவிடுகிறது. பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட 330ஐ ஜிடி வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். இது டீசல் வேரியன்ட்டை விட 1.5 நொடிகள் அதிக திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, முந்தைய மாடலை காட்டிலும், இந்த பொலிவு கூட்டப்பட்ட பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடலில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல், மறுவடிவமைக்கப்பட்ட அடாப்டிவ் எல்இடி-க்கள் மற்றும் எல்இடி ஃபாக் லேம்ப்களை தேர்வு முறையில் கொண்டுள்ளது. இதன் ஃபிரன்ட் பம்பர் பெரிய ஏர் வென்ட்கள் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, முந்தைய மாடலை காட்டிலும், இந்த பொலிவு கூட்டப்பட்ட பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடலில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல், மறுவடிவமைக்கப்பட்ட அடாப்டிவ் எல்இடி-க்கள் மற்றும் எல்இடி ஃபாக் லேம்ப்களை தேர்வு முறையில் கொண்டுள்ளது. இதன் ஃபிரன்ட் பம்பர் பெரிய ஏர் வென்ட்கள் கொண்டுள்ளது.

ரியர்;

ரியர்;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடலின் ரியரில் உள்ள பம்பரும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் டெயில் லேம்ப்கள், எல் வடிவம் உடைய எல்இடி அமைப்பு கொண்டுள்ளது. இதே போன்ற அமைப்பு தான், 7 சீரிஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 5 சீரிஸ் மாடலிலும் காணப்படுகிறது. இதன் ஆக்டிவ் ரியர் ஸ்பாய்லர் நீண்டு காணப்படுகிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடானிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதல் குரோம் பூச்சுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதிக அளவில் சேர்க்கபட்டுள்ள வுட் இன்லே-க்கள் இதற்கு கூடுதல் பிரிமியம் உணர்வு வழங்குகிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடானில், டிரைவர் மற்றும் பயணியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னர் பிரேக்கிங், ரீ-இன்ஃபோர்ஸ்ட் சைட்வால்கள் உடைய ரன் ஃபிளாட் டயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் வெஹிகிள் இம்மொபைலைசர் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

விலை;

விலை;

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி செடான் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் 320டி ஜிடி (கிரான் டூரிஸ்மோ) ஸ்போர்ட் லைன் - 43,30,000 லட்சம் ரூபாய்

பிஎம்டபுள்யூ 320டி ஜிடி (கிரான் டூரிஸ்மோ) லக்சுரி லைன் - 46,50,000 லட்சம் ரூபாய்

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் 330ஐ (கிரான் டூரிஸ்மோ) லக்சுரி லைன் - 47,50,000 லட்சம் ரூபாய்

குறிப்பு; இந்த அனைத்து விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் டெலிவிரி: இன்டீரியரை காணும் பாக்கியம்!

தகதகக்கும் தங்க நிற நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார்: துபாயில் தரிசனம்!

"வானத்துல பறக்கறவுங்களுக்கு நம்ம கஷ்டம் எப்படிங்க தெரியும்"!

English summary
BMW 3 Series GT (Gran Turismo) Sedan is launched In India. This new sedan features updated looks and new engine option. New BMW 3 Series is available with two different engine options. 2.0-litre turbocharged diesel found in 320d produces 187bhp and 400Nm of torque. 2.0-litre turbocharged petrol engine powering 330i variant produces 248.5bhp and 350Nm of torque. To know more, check here...
Story first published: Thursday, October 20, 2016, 12:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark