பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடான் இந்தியாவில் அறிமுகம்

Written By:

பிஎம்டபுள்யூ நிறுவனம், தங்களின் 5 சீரிஸ் வரிசையில் 520டி எம் ஸ்போர்ட் என்ற மற்றொரு புதிய வேரியன்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் தொடர்பான கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட்...

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட்...

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ நிறுவனம் தயாரித்து வழங்கும் சொகுசு செடான் ஆகும்.

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட், 520டி வேரியன்ட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் 3-வது மாடல் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட், 4 சிலிண்டர்கள் உடைய 1,995 சிசி, டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 187.4 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடானின் இஞ்ஜின் 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

இதன் மூலமாக தான், பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது. மேலும், ஸ்டீயரிங் வீலில் இணைக்கபட்டிருக்கும் பேடில் ஷிஃப்ட்டர்கள் மூலமாகவும், இதன் டிரைவர்கள் மேனுவலாக ஷிஃப்ட்களை கட்டுப்படுத்த முடியும்.

செயல்திறன்;

செயல்திறன்;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.7 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட், அதிகபட்சமாக மணிக்கு 233 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட், எகோ ப்ரோ (ECO PRO), கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் 3 விதமான வெவ்வேறு டிரைவிங் மோட்களில் கிடைக்கிறது.

மேலும், இந்த பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் செடானில், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உடைய ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் / ஸ்டாப் போன்ற எரிபொருள் மிச்சப்படுத்தும் தொழில்நுட்பங்களும் சேர்க்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி பார்த்தால், பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடான், அடாப்டிவ் ஹெட்லைட்கள், ஃபிரண்ட் பகுதியில் எம் பேட்ஜ், 18 இஞ்ச் அளவிலான 10 ஸ்போக்குகள் உடைய அல்லாய் வீல்கள் உள்ளன.

இதன் எக்ஸ்ஹாஸ்ட் டிப்கள் டார்க் குரோம் நிறத்திலும், இதன் டிஃப்யூஸர் மெட்டாலிக் டார்க் ஷேடோ பெயின்ட் வண்ணத்திலும் உள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடானின் இன்டீரியரில், லெதர் கொண்டு அப் ஹோல்ஸ்ட்ரி செய்யப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் சீட்களாக உள்ள இதன் ஃபிரண்ட் சீட்கள், எலக்ட்ரானிக் அட்ஜஸ்ட்மெண்ட் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட், பிஎம்டபுள்யூவின் ஐ-டிரைவ் சிஸ்டம் மற்றும் 10.1 இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே உடையே மல்டி-ஃபங்க்ஷன் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் டிஸ்பிளே, புளுடூத் மற்றும் யூஎஸ்பி கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளை கொணடுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடானில், பல்வேறு நிலைகளில் ஆன 6-ஏர் பேக்குகள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிஎஸ்சி எனப்படும் டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளது.

மேலும், இந்த பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடானில், கார்ணரிங் பிரேக் கண்ட்ரோல், ஹெச்டிசி எனப்படும் ஹில் டிஸ்சென்ட் கண்ட்ரோல், சைட்-இம்பேக்ட் புரொடெக்ஷன், எலக்ட்ரானிக் வெஹிகிள் இம்மொபலைஸர், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் சேர்க்கபட்டுள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடான், இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள பிஎம்டபுள்யூ உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடான், இனி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிஎம்டபுள்யூ ஷோரூம்களிலும் கிடைக்கும்.

விலை;

விலை;

பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட் சொகுசு செடான், 54 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் ஆல்-இந்தியா) விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபுள்யூ 5 சிரீஸ் பெட்ரோல் வேரியன்ட், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் உற்பத்தி துவங்கியது!

பிஎம்டபுள்யூ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
German automaker BMW has launched new variant of its 5 Series luxury sedan in India. This new variant is called as BMW 520d M Sport. It is locally produced at BMW's manufacturing facility in Chennai. BMW 520d M Sport comes with three driving modes — ECO PRO, Comfort, and Sport. It is priced at Rs. 54 lakh ex-showroom (all-India). To know more, check here...
Story first published: Wednesday, August 3, 2016, 7:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark