பிஎம்டபிள்யூ ஐ8 - உலகில் அதிகம் விற்பனையாகும் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார்

By Ravichandran

பிஎம்டபிள்யூ ஐ8 தான், உலகில் அதிகம் விற்பனையாகும் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கான பட்டத்தை தக்கவைத்து கொண்டுள்ளது,

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ ஐ8 பற்றி...

பிஎம்டபிள்யூ ஐ8 பற்றி...

ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனம் மூலம் தயாரிக்கபடும் பிஎம்டபிள்யூ ஐ8 ப்லக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், கடந்த ஆண்டுகளில் ஆன ஹைப்ரிட் கார்களின் விற்பனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

விற்பனை சாதனை;

விற்பனை சாதனை;

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், 2015-ஆம் ஆண்டில் மொத்தம் 5,456 என்ற அபார எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது.

இந்த எண்ணிக்கை, உலகின் பிற பிராண்ட்களின் ஹைப்ரிட் கார்களுடைய ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை விட அதிகமானது என்பது குறிப்பிடதக்க சாதனையாகும்.

பிஎம்டபிள்யூ பெருமிதம்;

பிஎம்டபிள்யூ பெருமிதம்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், இத்தகைய அபார சாதனை நிகழ்த்தியது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி இயன் ராபர்ட்சன் மிகுந்த பெருமித்தை வெளிபடுத்தினார்.

தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் மாடல் தான் உலகின் மிகவும் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் காராக உள்ளது. மேலும், இந்த பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், நாங்கள் எதிர்பார்த்ததை விட வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு இதை விட நற்பெயர் பெற்ற தர இது தான் மிக சிறந்த சாதனையாக இருக்க முடியும் என இயன் ராபர்ட்சன் தெரிவித்தார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. மேலும், இது எலக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

சூப்பராக காட்சியளிக்கும் இந்த ஹைப்ரிட் காரின் 1.5 லிட்டர் ஹைப்ரிட் இஞ்ஜின் 357 பிஹெச்பியையும், இதன் எலட்க்ரிக் மோட்டார், 129 பிஹெச்பியையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காரின் இஞ்ஜின், 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் இஞ்ஜின் மூலம் வெளியாகும் பவர் ரியர் வீல்களுக்கு கடத்தபடுகிறது.

மேலும், இதன் எலக்ட்ரிக் மோட்டார், 2 - நிலைகள் உடைய ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும்.

எலக்ட்ரிக் மோட்டார் திறன்;

எலக்ட்ரிக் மோட்டார் திறன்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காரின் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் மட்டும், மணிக்கு 120 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

கூடுதல் சிறப்புகள் சேர்க்க திட்டம்;

கூடுதல் சிறப்புகள் சேர்க்க திட்டம்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஹப்ரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில், எக்ஸ்குளுசிவ் ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் வெளியாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் முதல் முறையாக ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஐ8, ஃப்ரோஸன் கிரே மெட்டாலிக் ஆக்ஸ்ண்ட்கள் கொண்ட ப்ரோடானிக்ரெட் ரெட் எடிஷன் பெயிண்ட் பினிஷ் உடன் வெளியிடப்பட உள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

கிரே மெட்டாலிக் ஆக்ஸ்ண்ட்கள் கொண்ட ப்ரோடானிக்ரெட் ரெட் எடிஷன் பெயிண்ட் பினிஷ் உடன் வெளியாகும் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்பெஷல் எடிஷன் கார், அலுமினியம் மேட்டுடன் பெயிண்ட செய்யபட்ட ஹப்கள் கொண்டுள்ளது.

மேலும், இதன் பிஎம்டபிள்யூ டபுள்யூ-ஸ்போக் 470 லைட்-அல்லாய் வீல்கள் ஆர்பிட் கிரே மெட்டாலிக் நிறத்தில் வெளியாகிறது.

இந்த லிமிடெட் எடிஷன் குறிப்பிட்ட காலம் வரையே கிடைக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்பெஷல் எடிஷன் கார், ரெட் நிறத்திலான டபுள்-ஸ்டிச்சிங் மற்றும் செராமிக் உடனான உயர்ந்த தரத்திலான கார்பன் ஃபைபர் கொண்டுள்ளது.

இது பிரத்யேகமான ஸ்போர்டிங் குனாம்சங்களை வெளிபடுத்துகிறது.

விலை;

விலை;

ஸ்பெஷல் எடிஷனாக வெளியாகும் பிஎம்டபிள்யூ ஐ8 ஹப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், 2.29 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலையில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் வாங்கி சென்னைக்கு பெருமை சேர்த்த 'தல' அஜீத்!!

ஜப்பானில், அமேஸான் தளத்தில் பிஎம்டபிள்யூ ஐ8 கார் விற்பனை... ப்ரீ ஷிப்பிங்!

ஐ8 ஸ்பைடர் ஹைபிரிட் சூப்பர் காரின் படங்களை வெளியிட்ட பிஎம்டபிள்யூ

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
BMW i8 from BMW becomes the Best Selling Hybrid Sports Car in the World for the year 2015. This plug-in hybrid sports car from BMW, has raced past its previous sales compared to other hybrids. BMW sold 5,456 units in 2015. The BMW i8 Hybrid Sports Car is priced at Rs. 2.29 crores ex-showroom (Delhi).
Story first published: Saturday, February 20, 2016, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X