பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' ஸ்பெஷல் எடிஷன் விரைவில் அறிமுகம்

Written By:

பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ் சொகுசு காரின் 30-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' ('30 Years M3') என்ற ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்படுகிறது.

பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' ஸ்பெஷல் எடிஷன் கார் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

30-ஆம் ஆண்டு விழா..

30-ஆம் ஆண்டு விழா..

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஸ்போர்ட்ஸ் லக்சுரி (சொகுசு) கார் நிறுவனமான பிஎம்டபுள்யூ நிறுவனம், இந்த முதல் தலைமுறை பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ் காரை 1986-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது.

அப்போது, பிஎம்டபுள்யூ நிறுவனம், பிஎம்டபுள்யூ மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஜிஎம்பிஹெச் (BMW Motorsports GmbH) என்ற பெயரில் இயங்கி வந்தது.

தற்போது, பிஎம்டபுள்யூ எம் சீரிஸ் சொகுசு கார் அறிமுகம் செய்யபட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. பிஎம்டபுள்யூ எம் சீரிஸ் காரின் 30-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' என்ற ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்படுகிறது.

பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ்;

பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ்;

பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ் சொகுசு காரின் அறிமுகம், ஸ்போர்ட்டியான நடுத்தர ரேஞ்ச் (மிட்-ரேஞ்ச்) செக்மன்ட்டில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ், முழுக்க முழுக்க உயர்தர பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட்ஸ் காராகவும், தினசரி உபயோகத்திற்கு ஏற்ற காராகவும் விளங்குகிறது.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') கார், லிமிடெட் எடிஷன் காராக தயாரிக்கபடுகிறது.

இந்த மாடலில், வெறும் 500 கார்கள் மட்டுமே தயாரிக்கபட உள்ளது.

வண்ணம்;

வண்ணம்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') கார், எக்ஸ்குளுசிவ் (பிரத்யேகமான) மக்காவ் புளு மெட்டால்லிக் நிறத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' கார், பிஎம்டபுள்யூ எம்3 காரின் 'காம்ப்பட்டிஷன் பேக்கேஜ்' அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') காரின் இஞ்ஜின் பவர், வழக்கமான பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ் சொகுசு காரை காட்டிலும் 19 பிஹெச்பி கூட்டப்பட்ட நிலையில், தற்போது 450 பிஹெச்பி என்ற அளவில் உள்ளது.

பிஎம்டபுள்யூ எம்3 சீரிஸ் கார், 425 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') காரின் இஞ்ஜின், 7-ஸ்பீட் எம் டபுள் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டிவிடும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') கார், அடாப்டிவ் எம் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இது பீமரின் செயல்திறனை கூட்டுகிறது.

புதிய ஸ்பிரிங்குகள், டேம்பர்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர்கள் உள்ளிட்டவையும் மேம்படுத்தபட்டுள்ளது.

மோட்கள்;

மோட்கள்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') கார், மொத்தம் 3 மோட்களில் வெளியாகிறது.

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' கார், கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட்+ ஆகிய 3 மோட்களில் வெளியாகிறது.

மேலும், இது மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் எம் டிஃப்ஃபாரென்ஷியல் ஆக்ஸில்கள் மற்றும் டிஎஸ்சி எனப்படும் டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') கார், 666 எம் ஸ்டார் ஸ்போக் டிசைன் மற்றும் மிக்ஸ்ட் டயர்கள் உடைய, 20-இஞ்ச் எம் லைட்-அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' காரின் உட்புறத்தில், எலும்புகூடு (ஸ்கெலட்டல்) டிசைனில் ஆன எம் ஸ்போர்ட்ஸ் சீட்கள் மற்றும் நெய்யப்பட்ட பிஎம்டபுள்யூ எம் ஸ்டிரைப்கள் கொண்டுள்ளது.

லோகோ;

லோகோ;

'30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') என்ற லோகோ, ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') காரின் ஃபிரண்ட் டோர் சில்கள், இன்ஸ்ட்ருமென்ட் பேனலில் உள்ள கார்பன் ஃபைபர் இன்டீரியர் ட்ரிம் ஸ்டிரிப் மற்றும் ஃபிரண்ட் சீட் ஹெட்ரெஸ்ட்கள் ஆகிய பகுதிகளில் பதிக்கபட்டுள்ளது.

லெதர் டிசைன்;

லெதர் டிசைன்;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') கார், ஸ்பெஷல் எடிஷன் என குறிக்கும் வகையில், பிளாக் / ஃப்ஜார்ட் புளு (Black/Fjord Blue) அல்லது பிளாக் / சில்வர்ஸ்டோன் என்ற 2 வண்ணங்களின் கலவைகளில் வெளியாகிறது.

விலை;

விலை;

ஸ்பெஷல் எடிஷன் பிஎம்டபுள்யூ எம்3 '30 இயர்ஸ் எம்3' (‘30 Years M3') காரின் விலை 66,000 இங்கிலாந்து பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் 65,00,000, ரூபாய்) என்ற விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலை, இந்தியாவில் விதிக்கப்படும் வரிகளை சேர்க்காமல் வெளியிடப்பட்டுள்ள விலை விவரம் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபுள்யூ நிறுவனம், தானியங்கி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய திட்டம்

பிஎம்டபிள்யூ ஐ8 - உலகில் அதிகம் விற்பனையாகும் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார்

பிஎம்டபிள்யூ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
BMW is marking its 30th anniversary of celebrated BMW M series by launching the BMW M3 '30 Years M3' special limited edition globally. German sports luxury car manufacturer BMW launched first generation BMW M3 in 1986, while operating under the name of BMW Motorsports GmbH. Only 500 cars are made in special limited edition Model. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark