பிஎம்டபுள்யூ நிறுவனம், தானியங்கி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய திட்டம்

By Ravichandran

பிஎம்டபுள்யூ நிறுவனம், சுயமாக இயங்கும் தானியங்கி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தை குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

தானியங்கி எலக்ட்ரிக் கார்;

தானியங்கி எலக்ட்ரிக் கார்;

பிஎம்டபுள்யூ நிறுவனம், ‘அல்டிமேட் டிரைவிங் இயந்திரம்' தயாரிப்பதை தாண்டி ‘அல்டிமேட் செல்ஃப்-டிரைவிங் கார்' தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதை எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன்ர்.

நோக்கம்;

நோக்கம்;

ஜெர்மனியின் பவேரியா பகுதியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ நிறுவனம், டெஸ்லா போன்ற எலக்ட்ரிக் கார் உறப்த்தி நிறுவனங்களுடன் போட்டிபோடவே இத்தகைய செல்ஃப்-டிரைவிங் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளனர்.

இந்த செல்ஃப்-டிரைவிங் எலக்ட்ரிக் கார் ஆனது, தன்னாட்சி உரிமை கொண்ட அட்டோனமஸ் ஃப்ளாக்‌ஷிப் தயாரிப்பாக அறிமுகம் செய்கின்றனர்.

சுற்றுசூழலுக்கு இணக்கமானது;

சுற்றுசூழலுக்கு இணக்கமானது;

பொதுவாக எலக்ட்ரிக் கார்கள் மாசு வெளிபாடு பாதிப்புகள் இல்லாதவையாக உள்ளது. இதனால், இவை சுற்றுசூழலுக்கு இணக்கமானதாக உள்ளன.

எனவே, உலகம் முழுவதும் மெல்ல மெல்ல எலட்ரிக் காரின் உபயோகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

சிஇஓ கருத்து;

சிஇஓ கருத்து;

பிஎம்டபுள்யூ நிறுவனம் உருவாக்கி வரும் எலக்ட்ரிக் கார் குறித்து பிஎம்டபுள்யூ சிஇஓ ஹரால்ட் க்ரூகர் மிகுந்த பெருமிதத்தை வெளியிட்டார்.

இது தற்போதைக்கு, ஐநெக்ஸ்ட் லக்சுரி செடான் என அழைக்கபடுகிறது.

"இந்த எலக்ட்ரிக் கார், அட்டோனமஸ் டிரைவிங் (தானியங்கி டிரைவிவ்) தொழில்நுட்பம், டிஜிட்டல் கனெக்டிவிட்டி, இண்டெல்லிஜண்ட் லைட்வெயிட் டிசைன் (இலகுவான எடை கொண்ட டிசைன்), கொண்டதாக இருக்கும்.

முழுவதுமாக புதிய இண்டீரியர் கொண்ட இந்த ஐநெக்ஸ்ட் லக்சுரி செடான், சாலைகளில் அடுத்த தலைமுறை எலெக்ட்ரோ-மொபிலிட்டியை (போக்குவரத்தை) கொண்டு வரும் வாகனமாக இருக்கும்" என ஹரால்ட் க்ரூகர் தெரிவித்தார்.

அடிப்படைகள்;

அடிப்படைகள்;

மார்ச் மாதத்தில் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் போது அறிமுகம் செய்யபட்ட பிஎம்டபுள்யூ நெக்ஸ்ட் 100 கான்செப்ட் காரின் பல்வேறு டிசைன் குறிப்புகள் இந்த ஐநெக்ஸ்ட் லக்சுரி செடானில் ஏற்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

பிஎம்டபுள்யூ ஐநெக்ஸ்ட் லக்சுரி செடான், 2021-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ ஐ8 - உலகில் அதிகம் விற்பனையாகும் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார்

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்

பிஎம்டபிள்யூ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
BMW is all set to go from the 'Ultimate Driving Machine' to the 'Ultimate Self-Driving Machine'. BMW is planning to take on Tesla and the rest with an all-electric, autonomous flagship. At present, this BMW creation is called as iNext luxury sedan. This Self driving electric luxury sedan is expected to launch in 2021. To know more about BMW iNext luxury sedan, check here...
Story first published: Saturday, May 14, 2016, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X