பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவில் டீசல் கார்களுக்கான மவுசு குறைந்து வருகிறது. இதனையடுத்து, பெட்ரோல் கார்களை களமிறக்குவதற்கு கார் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தங்களது அனைத்து கார்களிலும் பெட்ரோல் மாடல்கள் களமிறக்கப்படும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்தது.

அதன்படி, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் xDrive 28i என்ற வேரியண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.54.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் மாடலில் 22.3 செமீ திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், ஐடிரைவ் டச் கன்ட்ரோல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் தர ஆடியோ சிஸ்டமும் இந்த காரில் உள்ளது.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

இதுதவிர, ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், பிரேக் எனர்ஜி ரீஜெனரேசன் நுட்பம் உளளிட்ட தொழில்நுட்பங்கல் உள்ளன. இது இலகு எடையுடன் சிறப்பான எடை பரவல் கட்டமைப்பு, அதிக நிலைத்தன்மையை வழங்கும் கட்டமைப்பு உளிட்டவை சிறப்பு சேர்க்கின்றன.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 245 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் மாடல் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கு நேர் போட்டியாக வந்துள்ளது.

Most Read Articles
English summary
The all-new X3 by BMW receives a 2.0-litre, four-cylinder, petrol engine for the Indian market. BMW X3 xDrive 28i xLine trim is priced attractively at Rs. 54.90 lakh ex-showroom (Delhi).
Story first published: Wednesday, December 7, 2016, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X