பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுடன் சேர்த்து, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடலும் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 பெட்ரோல் மாடலில் இடம்பெற்று இருக்கும் சிறப்புகள், வசதிகள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 xDrive35i என்ற வேரியண்ட்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டுடன் டிசைன் ப்யூர் எக்ஸ்பீரியன்ஸ் என்ற சிறப்பு பேக்கேஜும் சேர்த்து பெறலாம்.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 பெட்ரோல் மாடலில் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த மாடலிலும் ஐ-டிரைவ் சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, 3டி ஜிபிஎஸ் வரைபட வசதியை பெற முடியும். மேலும், ஹார்மன் - கார்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 பெட்ரோல் மாடலில் 3.0 லிட்டர் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 302 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தும் கட்டமைப்பு பெற்றது.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் இருக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்ட உதவும். ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் தொழில்நுட்பமும் உள்ளது.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அல்பைன் ஒயிட், பிளாக் சஃபையர், இம்பீரியல் புளூ மற்றும் ஸ்பார்க்ளிங் பிரவுன் ஆகிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆலையில் இந்த எஸ்யூவி உற்பத்தி செய்யப்படும். ரூ.73.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

English summary
BMW has launched the petrol powered variant of its X5 SUV in India following waning demand for diesel SUVs in India.
Story first published: Wednesday, December 7, 2016, 20:08 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos