பிஎஸ்-6 வரைமுறைகள், கனரக வாகனங்கள் வெளியிடும் மாசு வெளிபாடு அளவுகளை 50% குறைத்துவிடும்
பிஎஸ்-6 வரைமுறைகள், கனரக வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு வெளிபாடு அளவுகளை பாதிக்கு மேல் குறைத்துவிடும் என சுற்றுசூழல் துறைக்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.
பிஎஸ்-6 வரைமுறைகளை நடைமுறைபடுத்துவது தொடர்பாக, பிரகாஷ் ஜாவ்டேகர் மக்களவையில் உரை நிகழ்த்தினார். 2020-ஆம் ஆண்டிற்குள் பிஎஸ்-4 வரைமுறைகளை நடைமுறைபடுத்தினால், கன ரக வாகனங்களில் இருந்து வெளியாகும் நுண் துகள்கள் அளவு, 50 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துவிடும் என ஜாவ்டேகர் தெரிவித்தார்.
பிஎஸ்-5 வரைமுறைகளை நடைமுறைபடுத்த முயற்சிக்காமல், நேரடியாக பிஎஸ்-6 வரைமுறைகளை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொண்டால் மிகுந்த நன்மை பயக்கும் என ஜாவ்டேகர் கூறினார்.

இப்படி செய்வதன் மூலம், டீசல் அடிப்படையிலான கனரக வாகனங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்ஸைட் (NOx-Nitrous Oxide) அளவுகள் 88.5 சதவிகிதம் குறையலாம். மேலும், மொத்த நுண் துகள்கள் அளவு 50 சதவிகிதம் குறையலாம் என பிரகாஷ் ஜாவ்டேகர் அறிவித்தார்.
பிஎஸ்-6 வரைமுறைகளுக்கு உட்பட்ட எரிபொருள்களை தயாரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்க சுமார் 80,000 கோடி ரூபாய் செலவாகலாம். இதில், பிஎஸ்-6 வரைமுறைகளுக்கு உட்பட்ட பெட்ரோல் தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்க 20,000 கோடி ரூபாயும், டீசல் தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்க 60,000 கோடி ரூபாயும் செலவாகலாம் என பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








