புதிய புகாட்டி சிரான் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழுமையானத் தகவல்கள்

Written By:

பெரும் ஆவலைத் தூண்டிய புகாட்டி சிரான் ஹைப்பர் கார் ஜெனீவா மோட்டார் ஷோவின் மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக இந்த புதிய புகாட்டி கார் வந்துள்ளது. வேரான் காரை விட பல வகையிலும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஹைப்பர் கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

புகாட்டி வேரான் கார் போன்றே இதுவும் லிமிடேட் எடிசன் மாடல்தான். மொத்தமாக 500 புகாட்டி சிரான் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

டிசைன்

டிசைன்

கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த, புகாட்டி விஷன் கிரான் டூரிஷ்மோ கான்செப்ட் கார் மாடலின் அடிப்படையில் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. குதிரை குளம்பு வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், இரண்டு ஏர் இன்டேக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிசைன் தொடர்ச்சி...

டிசைன் தொடர்ச்சி...

அதிக ஆற்றல் வாய்ந்த இதன் எஞ்சினை பக்கவாட்டில் ஆர்ச் போன்ற ஏர் இன்டேக் காருக்கு டிசைன் ரீதியில் மிகுந்த கம்பீரத்தையும், தொழில்நுட்ப ரீதியில் எஞ்சினை குளிர்விப்பதற்கான காற்றை உட்செலுத்தும் புனல் போன்றும் பயன்படுகிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் இருப்பதுடன், எஞ்சின் வெப்பத்தை வெளித்தள்ளுவதற்கான ஏர் வென்ட்டுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 6 செலென்சர்கள் உள்ளன. அதில், நான்கு பின்புறத்தில் வெளியில் தெரிகிறது. மீதமுள்ள இரண்டு கீழ் நோக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டீரியர்

இன்டீரியர்

இதன் இன்டீரியர் கஸ்டமைஸ் செய்து கொடுக்கப்படுகிறது. ஒரு காரை ஒரு வாரம் எடுத்துக் கொண்டு தயாரிக்கின்றனர்.

எஞ்சின்

எஞ்சின்

புகாட்டில் வேரான் காரில் இருந்த அதே டபிள்யூ16 8.0 லிட்டர் எஞ்சினை மேம்படுத்தி இந்த காரில் பொருத்தியிருக்கின்றனர். 16 சிலிண்டர்கள் கொண்ட இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரையும், 1,600 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் வல்லமை பொருந்தியது. அனைத்து சக்கரங்களுக்கும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் கடத்தப்படுகிறது.

கார்பன் ஃபைபர் கட்டமைப்பு

கார்பன் ஃபைபர் கட்டமைப்பு

கார்பன் ஃபைபர் யூனிபாடி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் 1,995 கிலோ எடை கொண்டது. கிட்டத்தட்ட 2 டன் எடை கொண்ட இந்த காரை இதன் ஆற்றல் வாய்ந்த எஞ்சின் எவ்வளவு சிறப்பாக செயல்திறனை வெளிப்படுத்துகிறது என்பதை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

செயல்திறன்

செயல்திறன்

மணிக்கு 420 கிமீ வேகம் கொண்டதாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இது புகாட்டி வேரான் காரை விட சற்றே கூடுதல் வேகம் கொண்டதாக வந்திருக்கிறது. மேலும், 0 - 100 கிமீ வேகத்தை 2.5 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளிலும், 0 - 300 கிமீ வேகத்தை 13.6 வினாடிகளிலும் தொட்டுவிடுமாம்.

5 விதமான டிரைவிங் ஆப்ஷன்கள்

5 விதமான டிரைவிங் ஆப்ஷன்கள்

புகாட்டி சிரான் காரின் எஞ்சின் 5 விதமான இயக்கத்தை வெளிப்படுத்தும் வசதியுடன் வந்துள்ளது. லிஃப்ட், ஆட்டோ, ஆட்டோபான், ஹேண்ட்லிங் மற்றும் டாப் ஸ்பீடு ஆகிய 5 விதமான டிரைவிங் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதில், முதல் நான்கு ஆப்ஷன்களை ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டிருக்கும் டயல் மூலமாக தேர்வு செய்து கொள்ளலாம்.

டிரைவிங் மோடு பயன் என்ன?

டிரைவிங் மோடு பயன் என்ன?

சாலை நிலை மற்றும் வேகத்துக்கு தக்கவாறு காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை், சஸ்பென்ஷன், ஸ்டீயரிங் வீலில் தானியங்கி முறையில் மாற்றங்களை செய்து கொள்ளும். மேலும், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த டிரைவிங் மோடுக்கு தக்கவாறு செயல்படும்.

டிரைவிங் மோடுகள் விபரம்

டிரைவிங் மோடுகள் விபரம்

லிஃப்ட் ஆப்ஷனில் வைக்கும்போது வேகத்தடைகள் மற்றும் மோசமான சாலைகளில் கடப்பதற்கு உதவும் வகையில் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு உயர்த்திக் கொள்ளும். 50 கிமீ வேகத்தை தாண்டும்போது, ஆட்டோ என்ற ஆப்ஷன் செயல்படும். மேலும், காரின் சஸ்பென்ஷன், ஸ்டீயரிங் அமைப்புகளில் மாற்றங்களை செய்து கொள்ளும். மணிக்கு 180 கிமீ வேகத்தில் காரை செலுத்தும்போது ஆட்டோபான் செயல்படும். இதன்மூலமாக காரின் கையாளுமை சிறப்பாக இருக்கும்.

ஆக்டிவ் டர்போசார்ஜர்

ஆக்டிவ் டர்போசார்ஜர்

இந்த காரின் எஞ்சினுக்கு 4 டர்போசார்ஜர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதில், 3,800 ஆர்பிஎம் வரையிலான எஞ்சின் சுழல் வேகத்தில் 2 டர்போ சார்ஜர்கள் செயல்படும். அதற்கு மேலான ஆர்பிஎம் செல்லும்போது மட்டும் 4 டர்போ சார்ஜர்களும் செயல்படும்.

10 ரேடியேட்டர்கள்

10 ரேடியேட்டர்கள்

1,479 பிஎச்பி ஆற்றல் கொண்ட புகாட்டி எஞ்சினை குளிர்விப்பதற்காக 10 ரேடியேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன், ஒரு நிமிடத்திற்கு 800 லிட்டர் தண்ணீரை சுழற்சி செய்யும் வல்லமை கொண்ட கூலண்ட் சிஸ்டம் மற்றும் 60,000 லிட்டர் காற்றை சுழற்சி செய்யும் ஏர் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

புகாட்டி சிரான் ஹைப்பர் காரின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக கார்பன் செராமிக் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் முன்புறத்தில் 8 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 420 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 6 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 400 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அதிவேக காரை இந்த சக்திவாய்ந்த பிரேக்குகள் 100 கிமீ வேகத்திலிருந்து 31.3 மீட்டர்களுக்குள் காரை நிறுத்திவிடும். அதேபோன்று, 200 கிமீ வேகத்திலிருந்து வெறும் 125 மீட்டருக்குள்ளும், 300 கிமீ வேகத்திலிருந்து 275 மீட்டர்களுக்குள்ளும் காரை நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.

விலை

விலை

புதிய புகாட்டி சிரான் கார் 2.4 மில்லியன் யூரோ விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.17.82 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

மொத்தம் தயாரிக்கப்பட உள்ள 500 புகாட்டி சிரான் கார்களில் 180 கார்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டதாம்.

 
English summary
Bugatti has launched the Chiron, the successor to its all conquering Veyron at the 2016 Geneva Motor Show. The Chiron is priced at an eye watering €2.4 million (Rs. 17.82 Crores).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark