புகாட்டி சிரான் ஹைபர்காரின் விவரகுறிப்புகள் மற்றும் இதர தகவல்கள் கசிந்துள்ளது

Written By:

புகாட்டி சிரான் காரின் விவரகுறிப்புகள் மற்றும் உச்சபட்ச வேகம் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது.

தற்போது உற்பத்தி நிலையிலும், விரைவில் வெளியாக இருக்கும் புகாட்டி சிரான் கார் குறித்த விவரகுறிப்புகள் மற்றும் கூடுதல் தகவல்கள், ஒரு செக் குடியரசு நாட்டின் இதழுக்கு மூலம் வெளியிடபட்டுள்ளது.

இந்த தகவல்கள் எல்லாம், புகாட்டி சிரான் ஹைபர்காரை ஏற்கனவே புக்கிங் செய்துள்ள ஒரு வாடிக்கையாளர் மூலம் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய கார் குறித்த விவரகுறிப்புகள் வழங்கபடும் போது, இந்த கீழ் குறிப்பிட்டுள்ள தகவல்களை பார்த்ததாக கூறிய வாடிக்கையாளர், இத்தகவல்களை மேகஃஜின் ப்ரோடிரைவர் சிஇசட் என்ற இதழுக்கு வழங்கியுள்ளார்.

bugatti-chiron-production-specifications-leaked-by-Magazín-ProDriver-CZ

புகாட்டி சிரான் ஹைபர்கார் குறித்த பிரத்யேக தகவல்கள் உங்களுக்காக வழங்கபடுகிறது...

பெயர் ; புகாட்டி சிரான் ஈபி16.4

பவர் ; 1500 ஹெச்பி

டார்க் ; 1500 என்எம்

0 முதல் மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகம் ; 2.2 நொடிகளில் எட்டும்

உச்சபட்ச வேகம் ; மணிக்கு 467 கிலோமீட்டர்

விலை ; 2 மில்லியன் யூரோக்கள்

மணிக்கு 500 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை காட்டும் வகையிலான ஸ்பீடோமீட்டர் இந்த புகாட்டி சிரான் ஹைபர்காரில் பொருத்தபட்டிருந்ததை அந்த பெயர் குறிப்பிடபடாத வாடிக்கையாளர் பார்த்தை கூறியதாக, மேகஃஜின் ப்ரோடிரைவர் சிஇசட் இதழ் தெரிவிக்கிறது.

புகாட்டி வேரான் காரை காட்டிலும் இந்த புகாட்டி சிரான் ஹைபர்கார் மிகவும் வசதியாகவும், கூடுதல் இடம் நிறைந்ததாகவும், சற்று அதிக ஆக்ரோஷம் நிறைந்ததாக காணப்படுகிறது என இந்த இதழ் தெரிவித்துள்ளது.

bugatti-chiron-teaser

புகாட்டி சிரான் ஹைபர்கார், 5 ஆண்டுகளுக்கு உற்பத்தி சுழற்சியில் இருக்கும் எனவும், பிரான்ஸ் நாட்டில் உள்ள மோல்ஷெய்ம் தலைமையகத்தில் இருந்து வெரும் 100 புகாட்டி சிரான் ஹைபர்கார்கள் மட்டுமே தயாரிக்கபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The final production level specifications of the soon to be launched Bugatti Chiron are leaked to a Czech magazine through a Customer. These details were leaked to the Czech magazine Magazín ProDriver CZ who has placed order for this new Bugatti Chiron. The customer says that, this Bugatti Chiron has a speedometer upto 500km/h.
Story first published: Saturday, January 2, 2016, 11:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more