சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்

By Ravichandran

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பிஎம்டபுள்யூ, ஆடி மற்றும் போர்ஷே உள்ளிட்ட சொகுசு கார்கள், சுமார் 5 லட்சம் ரூபாயில் ஏலம் விடப்படுகிறது.

சொகுசு கார்கள், கனவிலும் நினைத்தும் பார்க்க முடியாத மிக குறைந்த விலைகளில் ஏலம் விடப்படுவது குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சென்னை பெரு வெள்ளம்

சென்னை பெரு வெள்ளம்

சில வாரங்களுக்கு முன்பு, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கடுமையான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளங்களினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.

இதில், நூற்றுகணக்கான மனிதர்கள் உயிரிழந்தனர். ஆயிரகணக்கான வாகனங்கள் பாதிக்கபட்டிருந்தது.

குறைந்த விலையில் கிடைக்கும் சொகுசு கார்கள்;

குறைந்த விலையில் கிடைக்கும் சொகுசு கார்கள்;

போர்ஷே காரின் விலை 5 லட்சம் ரூபாய், பிஎம்டபுள்யூ டாரின் விலை 8 லட்சம் ரூபாய் தான் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால், இது நிஜம் தான்.

இதெல்லாம் பண்டிகைகால தள்ளுபடிகள் அல்ல. ஆன்லைன் ஏலத்தில் கிடைக்கும் சொகுசு கார்களின் அடிப்படை விலைகள் ஆகும்.

இன்சூரன்ஸ் பெறபட்ட கார்கள் விற்பனை;

இன்சூரன்ஸ் பெறபட்ட கார்கள் விற்பனை;

மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட கார்களுக்கு இன்சூரன்ஸ் தொகைகள் பெறப்பட்டதையடுத்து, வெள்ளங்களினால் பாதிக்கபட்ட நுழைவு நிலை கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை அனைத்து வலையான கார்களும் ஏலத்தில் விற்கபடுகின்றன.

இந்த கார்கள், அதன் அசல் ஆன்-ரோட் விலையில் இருந்து 10-ல் ஒரு மடங்கு விலையில் விற்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ஆன்லைன் ஏல நிறுவனங்களுக்கு மவுசு;

ஆன்லைன் ஏல நிறுவனங்களுக்கு மவுசு;

ஏராளமான கார்கள் மற்றும் பிற வாகனங்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைன் ஏல நிறுவனங்களுக்கும் நல்ல வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சமீபத்திய தகவல்களின் படி, copart.in என்ற ஆன்லைன் ஏல நிறுவனமும், சென்னையை அடுத்து உள்ள தங்களின் ஸ்ரீபெரும்புதூர் யார்ட்டில், 100-க்கும் மேற்பட்ட கார்களை ஏலத்தில் விற்பதற்கு குவித்து வைத்துள்ளனர்.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஏல நிறுவத்திற்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பேங்குகள், டீலர்கள் உள்ளிட்ட பர தரப்பினரிடம் இருந்து, கார்களை விற்று தருவதற்கான வேண்டுகோள்கள் குவிந்து வருகின்றது.

சமீபத்திய கார்களும் ஏலத்தில் கிடைக்கிறது;

சமீபத்திய கார்களும் ஏலத்தில் கிடைக்கிறது;

2015 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் வெளியான கார்களும் ஏலத்தில் விற்கபடுகிறது. இத்தகைய ஏலங்களில் கார்கள் மற்றும் அதன் ஆவணங்கள் விற்கபடுகிறது.

விற்கபடும் கார்களின் நிலைகள் குறித்து எந்த விதங்களிலும், பொறுப்பும் ஏற்பதில்லை கோபார்ட் நிறுவனத்தின் எம்டி ராஜீவ் கபூர் தெரிவித்தார்.

சொகுசு கார்களின் அதிர்ச்சியூட்டும் விலை விவரங்கள்;

சொகுசு கார்களின் அதிர்ச்சியூட்டும் விலை விவரங்கள்;

சமீபத்திய ஏலத்தில்,

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் கார் - சுமார் 6 லட்சம் ரூபாய் என்ற துவக்க விலையிலும்,

2015 ஆடி ஏ4 சொகுசு கார் - சுமார் 3.4 லட்சம் ரூபாய் என்ற விலையிலும்,

போர்ஷே சயான் (2012 மாடல்) - சுமார் 5 லட்சம் ரூபாய் என்ற விலையிலும்

விற்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

தொடரும் ஏலம்;

தொடரும் ஏலம்;

கடந்த வாரத்தில் மட்டும், இந்த நிறுவனத்தின் தளத்திற்கு தினசரி சுமார் 10 கார்கள் வீதம் வந்து குவிகிறது.

தற்போதைய நிலையில், 108 கார்கள் இந்த கோபார்ட் நிறுவனத்திடம் குவிந்து இருப்பதாலும், கூடுதல் அளவிலான கார்களின் இன்சூரன்ஸ் தொகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கபட்டு வரும் நிலையில், வாராந்திர ஏலங்கள் மேற்கொள்ளபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

தென் இந்தியா முழுவதிலும், இத்தகைய கார்கள் வாங்க விருப்பபடும் நபர்கள், இந்த கோபார்ட் போன்ற நிறுவனங்களின் தளத்தில் பதிவு செய்து கொள்கின்றனர்.

இத்தகைய நிறுவனங்கள் மூலம் நடத்தபடும் ஏலங்களில் பங்கேற்க, குறிப்பிட்ட அளவிலான திரும்ப பெறக்கூடிய செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தபடுகிறது.

உதிரிபாகங்களுக்காக வாங்கபடும் கார்கள்;

உதிரிபாகங்களுக்காக வாங்கபடும் கார்கள்;

வெள்ளங்களினால் பாதிக்கபட்ட இத்தகைய வாகனங்களின் ஏலங்கள், முழு கார்களாக உபயோகிப்பதற்காக வாங்கவோஅல்லது விற்கவோ செய்யபடுவதில்லை.

இத்தகைய கார்கள், பெரும்பாலும் அவற்றின் உதிரி பாகங்களுக்காகவே வாங்கபடுகிறது. இதற்கு முக்கிய காரணம், சில சொகுசு கார்களின் உதிரிபாகங்கள் தனியாக விற்கபடுவதில்லை. எனவே, ஏலங்களில் விற்கபடும் கார்களின் உதிரிபாகங்கள் எடுக்கபட்டு அவை தனித்தனியாக விற்கபடுகிறது.

இந்த ஏலங்கள் குறைந்தது 3 மாதங்களுக்கு நீடிக்கும் என கோபார்ட் நிறுவனத்தின் எம்டி ராஜீவ் கபூர் தெரிவித்தார்.

10,000-ற்கும் கூடுதலான கார்கள் விற்பனை;

10,000-ற்கும் கூடுதலான கார்கள் விற்பனை;

செலக்ட் ஆட்டோ மார்ட் என்ற மற்றொரு நிறுவனம், சென்னை மற்றும் இதர வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்சூரன்ஸ் செய்து அதற்கான காப்பீடு தொகைகளை பெற்றவர்கள் மூலம் விற்கபட்ட சுமார் 10,000 கார்களை ஏலத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 20 நாட்களில் மட்டும் 5,000 கார்கள் விற்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

வட மாநிலங்களில் இருந்தும் குவியும் வாடிக்கையாளர்கள்

வட மாநிலங்களில் இருந்தும் குவியும் வாடிக்கையாளர்கள்

பெரும் அளவிலான கார்கள், குறைந்த விலைகளில் விற்கபடுவதால், மும்பை, குஜராத், டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், ஏலத்தில் விற்கபடும் இத்தகைய கார்களை வாங்குபவர்கள் தமிழகம் நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

வெள்ளங்கள் மூலம் பாதிக்கபட்ட 10 நாட்கள் முதலே, இது போன்ற கார் விற்பனை நிறுவனங்களிடம் பாதிக்கபட்ட கார்கள் வர துவங்கிவிட்டது. இது போன்ற கார்களை வாங்க ஸ்கிராப் டீலர்களும், தனி நபர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இது போன்ற ஏலங்கள் குறைந்தது ஜனவரி இறுதி வரையிலாவது தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள்!

வெள்ளக்காடாக மாறிய சென்னையில் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்கு சில வழிமுறைகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

இன்று அதிகம் படிக்கபட்ட ஸ்வாரஸ்யமான செய்திகள்;

இன்று அதிகம் படிக்கபட்ட ஸ்வாரஸ்யமான செய்திகள்;

பாதுகாப்பான சேவையை வழங்கும் உலகின் டாப் 20 விமான நிறுவனங்கள்

ரத்தன் டாடாவும், அவரது மோட்டார் உலகமும்... பிறந்த தின சிறப்பு பகிர்வு

பறக்கும் பலகையில் ஓர் பரவச பயணம்... கனவு நனவாகிறது

Most Read Articles
English summary
Flood affected Cars from Chennai and other parts of Tamilnadu sold on auction at throwaway prices. Luxury Cars like BMW, Audi and Porsche are sold in auction, with the Base prices, which starts from around Rs 5 lakhs. As the motor insurance claims are being settled, Cars are auctioned off tenth of their on-road price.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X