இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Written By:

செவர்லே இந்தியா நிறுவனம், தாமாக முன் வந்து தங்களின் செவர்லே க்ரூஸ் செடான் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. 2009 முதல் 2011-ஆம் ஆண்டுகள் இடையில் உற்பத்தி செய்யபட்டுள்ள கார்களுக்கு மட்டுமே இந்த ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செவர்லே இந்தியா நிறுவனத்தின் இந்த ரீகால் தொடர்பான கூடுதல் தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இக்னிஷன் தொடர்பாக ஏற்படும் கோளாறுகளால் தான் செவர்லே க்ரூஸ் ரீகால் செய்யப்படுகிறது. இந்த இக்னிஷன் கோளாறுகளால், குறைந்த வேகத்தில் செல்லும் போது, செவர்லே க்ரூஸ் செடானின் இஞ்ஜின்கள் நின்று விட வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மேலும் க்ரூஸ் உரிமையாளர்கள், வாகனத்தை இயக்கும் போது, பவர் குறைவதையும் அல்லது பவர் இழக்கும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனினும், இந்த பிரச்னைகளினால் எத்தனை க்ரூஸ் செடான் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை செவர்லே இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை.

இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

செவர்லே க்ரூஸ் செடான் உரிமையாளர்கள், தங்களின் வாகனங்களை அருகில் உள்ள டீலர்ஷிப்களுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் செவர்லே க்ரூஸ் செடானை சிக்கலில்லாமல் சரி செய்து கொள்ள, அருகில் உள்ள டீலர்ஷிப்பிடம் அப்பாயிண்ட்மெண்ட் அற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

வாடிக்கையாளர்களின் கார்களில் இந்த இக்னிஷன் பிரச்னை இருந்தால், டெக்னீஷியன்கள், இந்த பழுதான பாகத்தை ரிப்பேர் செய்தோ அல்லது மாற்றியோ, இந்த பிரச்னைக்கு ஒரு மணி நேரத்திற்குள் தீர்வு வழங்குவர்.

இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

செவர்லே க்ரூஸ் செடானில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த இக்னிஷன் பிரச்னைகளுக்கான ரீகால் தொடர்பான ரிப்பேர் நடவடிக்கைகளுக்கு எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடானுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மேலும், செவர்லே இந்தியா நிறுவனம், தேர்வு முறையிலான பிக்-கப் சர்வீஸ் வசதியையும் வழங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சீனாவில் புதிய செவர்லே க்ரூஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதுப்பொலிவுடன் வரும் செவர்லே க்ரூஸ் கார் - படங்கள் வெளியீடு

க்ரூஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Chevrolet India has issued voluntary recall for their Cruze sedan sold across India. Only the Chevrolet Cruze, manufactured between 2009 to 2011 are affected. There seems to be some issue with ignition system in Cruze. Ignition issue could stall Cruze's engine at low speeds. Cruze owners would experience loss of ignition and power while driving. To know more, check here...
Story first published: Friday, September 2, 2016, 7:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark