செவர்லே நிறுவனம், இந்தியாவில் விற்கும் அனைத்து மாடல்களின் விலைகளும் உயர்ந்தது

By Ravichandran

செவர்லே நிறுவனம், தாங்கள் இந்தியாவில் விற்கும் அனைத்து மாடல்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளனர்.

இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யபட்ட மத்திய அரசின் யூனியன் பட்ஜெட்டை அடுத்து, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ் என்ற பெயரில் புதிய வரி ஒன்று கூடுதலாக வசூலிக்கபடுகிறது.

இந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ் எனப்படும் வரியினால் தான், இந்த விலை உயர்வு செய்யபடுவதாக செவர்லே நிறுவனம் அறிவித்துள்ளது.

chevrolet-india-cars-price-hike-up-to-51000-rupees-across-all-variants

புதிய வாகன உரிமையாளர்கள், தாங்கள் தேர்வு செய்யும் வாகனத்தை பொருத்து 3,500 ரூபாய் முதல் 51,000 ரூபாய் வரை விலை கூடுதலாக இருக்கும்.

இந்த விலைஉயர்வு, செவர்லே நிறுவனம் இந்தியாவில் விற்கும் அனைத்து மாடல்கள் மீதும், வேரியண்ட்கள் மீதும் செய்யபடுகிறது. சிறிய மாடல்கள் மீது இந்த விலைஉயர்வின் தாக்கம் குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

செவர்லே நிறுவன தயாரிப்புகளின் விலைஉயர்வு குறித்த தகவல்களை ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஹர்தீப் பிரார் உறுதி செய்தார். எனினும், அதிசயிக்கும் வகையில், சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட செவர்லே க்ரூஸ் மாடலின் விலை உயர்த்தபட வில்லை.

chevrolet-india-cars-price-hike-up-to-51000-rupees-across-their-variants

செவர்லே க்ரூஸ் மாடல், 13.95 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)) விலையில் விற்கபடுகிறது.

வேறு பல கார் உற்பத்தி நிறுவனங்கள், சமீபத்தில் தான் கார் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ் மற்றும் உள்ளீடுகளின் விலை உயர்வை காட்டி செய்யபட்டுள்ளது.

செவர்லே நிறுவனம் தவிர, மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள், தங்கள் மாடல்களின் விலைகளை உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Most Read Articles
English summary
Chevrolet India has also done Price hike of their entire products portfolio. These new pricing of models is implemented with immediate effect across India. Infrastructure Cess introduced in Union Budget is mentioned as reason for increase in pricing. New vehicle owners may have to spend an additional amount ranging from Rs. 3,500 to Rs. 51,000.
Story first published: Wednesday, March 9, 2016, 19:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X