செவர்லே இந்தியா வழங்கும் 72,000 ரூபாய் வரையிலான சலுகைகள், ஆதாயங்கள் - முழு விவரம்

Written By:

செவர்லே இந்தியா நிறுவனம், தங்களின் கார் மாடல்கள் மீது ஈர்க்கும் வகையிலான சலுகைகளையும், ஆதாயங்களையும் வழங்குகின்றனர்.

செவர்லே நிறுவனம் வழங்கும் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சலுகை வழங்கப்படும் மாடல்கள்;

சலுகை வழங்கப்படும் மாடல்கள்;

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம், தங்களின் செவர்லே செயில் காம்பேக்ட் செடான், செவர்லே என்ஜாய் எம்பிவி மற்றும் செவர்லே பீட் ஹேட்ச்பேக் ஆகிய 3 மாடல்கள் மீது எக்கசக்கமான தள்ளுபடிகளை அள்ளி வழங்குகின்றனர்.

இந்த சலுகைகள் அனைத்தும் குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இந்த சலுகைகள் ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கிறது.

சலுகைகளுக்கான காரணம்;

சலுகைகளுக்கான காரணம்;

செவர்லே இந்தியா நிறுவனம் வழங்கும் இந்த அனைத்து சலுகைகளும், மிட்-இயர் செலப்ரேஷன் என்ற பெயரில் ஆண்டு மத்தியில் வழங்கப்படும் சலுகைகளாக கொடுக்கப்படுகிறது.

இதில், அதிகப்படியாக 72,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

செவர்லே செயில் காம்பேக்ட் செடான்;

செவர்லே செயில் காம்பேக்ட் செடான்;

செவர்லே செயில் காம்பேக்ட் செடான், இந்தியா முழுவதும் 47,000 ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட ஆதாயங்களுடன் கிடைக்கிறது.

செவர்லே செயில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், 20,000 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

மேலும், செவர்லே செயில் காம்பேக்ட் செடானுக்கு 3 வருடங்களுக்கான பராமரிப்பு ஒப்பந்தம் இலவசமாக கிடைக்கிறது.

செவர்லே என்ஜாய்;

செவர்லே என்ஜாய்;

ஆச்சர்யப்படும் விதமாக, செவர்லே என்ஜாய் எம்பிவி மாடல் மீதும் செவர்லே நிறுவனம் ஆதாயங்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

செவர்லே என்ஜாய் எம்பிவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 55,000 ரூபாய் மதிப்பு கொண்ட ஆதாயங்கள் கிடைக்கும்.

கூடுதலாக, 20,000 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் முதல் வருடத்திற்கான இன்ஷூரன்ஸ் இலவசமாக கிடைக்கிறது.

செவர்லே பீட்;

செவர்லே பீட்;

செவர்லே பீட் ஹேட்ச்பேக் மாடல் மீது தான் அதிகப்படியாக 72,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

செவர்லே பீட் ஹேட்ச்பேக் மீது, 20,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாது, செவர்லே இந்தியா நிறுவனம், செவர்லே பீட் ஹேட்ச்பேக்கிற்கு முதல் வருடத்திற்கான இன்சூரன்ஸ் மற்றும் 3 வருடங்களுக்கான பராமரிப்பையும் இலவசமாக வழங்குகின்றது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செயில் தொடர்புடைய செய்திகள்

என்ஜாய் தொடர்புடைய செய்திகள்

பீட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Chevrolet India is offering amazing discounts and benefits on three of their models - Chevrolet Sail compact sedan, Chevrolet Enjoy MPV and Chevrolet Beat hatchback. These offers are available on limited number of units and is valid only until June 30. These offers are part of Chevrolet India's mid-year celebration with benefits upto Rs.72,000. To know more, check here...
Story first published: Thursday, June 23, 2016, 13:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark