ஆசிரியர் தினத்திற்கு பிரத்யேக சலுகைகள் வழங்கும் செவர்லே

Written By:

செவர்லே நிறுவனம், இந்த ஆசிரியர் தினத்திற்கு என பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது. அனைத்து தரப்பினருக்கும், அவரவருக்கென தனி தனியே தினங்கள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி, வருடம் தோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சமுதாயத்தில் ஆசிரியர்கள் ஆற்றும் பணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, செவர்லே நிறுவனம் ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் மற்றும் டெஸ்ட் டிரைவ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. செவர்லே நிறுவனம் வழங்கும் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் தொடர்பான தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

சலுகை காலம்;

சலுகை காலம்;

ஆசிரியர் தினத்திற்காக, செவர்லே நிறுவனம் வழங்கும் இந்த சலுகைகள் செப்டம்பர் மாதம் முழுவதும் வழங்கப்படும்.

சிறப்பு மரியாதை;

சிறப்பு மரியாதை;

தற்போது, கார்கள் வாங்க விரும்பும் ஆசிரியர்கள், அருகில் உள்ள செவர்லே ஷோரூம்களுக்கு செல்ல வேண்டும்.

அங்கு, பிற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகலை காட்டிலும், ஆசிரியர்களுக்கு என சிறப்பு சலுகைகள், ஸ்கீம்கள் வழங்கப்படும்.

ஆரியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அளிக்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள, 1800-3000-8080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

பிரச்சார நடவடிக்கைகள்;

பிரச்சார நடவடிக்கைகள்;

செவர்லே இந்தியா நிறுவனம், இந்த சலுகைகள் தொடர்பாக டீச்சர்ஸ் கனெக்ட் வீக் என்ற பிரச்சார நிகழ்ச்சியையும் நடத்தினர். இந்த பிரச்சார நிகழ்ச்சிகளின் போது, பல்வேறு செவர்லே தயாரிப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி மையங்களில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும், இஞ்ஜினியரிங், மருத்துவ, எம்பிஏ மற்றும் பிற கல்வி மையங்களில் டெஸ்ட் டிரைவ் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய மாடல்கள்;

தற்போதைய மாடல்கள்;

இந்திய வாகன சந்தைகளில் செவர்லே பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகின்றது. தற்போதைய நிலையில், செவர்லே நிறுவனம், பீட் ஹேட்ச்பேக், செயில் காம்பேக்ட் செடான், செயில் ஹேட்ச்பேக், என்ஜாய் எம்பிவி, குரூஸ் செடான், டவேரா எம்பிவி மற்றும் ட்ரெயில்பிளேசர் பிரிமியம் எஸ்யூவி ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்;

தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்;

செவர்லே இந்தியா நிறுவனம், வழங்கும் இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மீது மட்டும் கிடைக்கும்.

English summary
September 5th is celebrated as Teacher's Day across India. Chevrolet decided to honour these role models with special offers and discounts throughout September 2016. Discounts, offers, and test drives are offered to recognise Teacher's contribution towards society. Teachers looking to buy vehicle could head to Chevrolet dealership. To know more, Teachers can call 1800-3000-8080. To know more, check here...
Story first published: Tuesday, September 6, 2016, 17:09 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos