4 கிராம் தங்க காசுகளுடன் செவர்லே வழங்கும் பண்டிகை கால சலுகைகள்

Written By:

செவர்லே இந்தியா நிறுவனம், இந்த பண்டிகை காலத்திற்கு 4 கிராம் தங்க காசுகள் மற்றும் கேஷ் பெனிஃபிட் எனப்படும் ரொக்க ஆதாயங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களின் போது ஏராளமான சலுகைகளை அளிக்கின்றன.

அந்த வகையில், செவர்லே வழங்கும் பண்டிகை கால சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகளின் அளவுகள்;

சலுகைகளின் அளவுகள்;

செவர்லே நிறுவனம், 4 கிராம் தங்க காசுகள் அல்லாது, அதிகப்படியாக 1.12 லட்சம் ரூபாய் வரையிலான சலுகையும், குறைந்த பட்சமாக 52,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியை அளிக்கிறது.

குரூஸ் செடான்;

குரூஸ் செடான்;

செவர்லே நிறுவனம், குரூஸ் செடான் மீது ஒட்டுமொத்தமாக 1.12 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை அளிக்கிறது. இதில், 50,000 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 50,000 ரூபாய் ரொக்க ஆதாயம் என்ற முறையிலும் வழங்கப்படுகிறது. இத்தோடு, 4 கிராம் எடை கொண்ட தங்க காசும் கொடுக்கப்படுகிறது.

செயில் செடான்;

செயில் செடான்;

செவர்லே நிறுவனம், செயில் செடான் மீது 77,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது. இதில் முதல் வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸ், 20,000 ரூபாய் மதிப்பு கொண்ட எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 20,000 ரூபாய் மதிப்பிலான ரொக்க ஆதாயம் கிடைக்கும். மேலும், செயில் மாடல் செவர்லே டீலர்ஷிப்கள் 4 கிராம் தங்க காசுகளையும் அளிக்கின்றன.

பீட் ஹேட்ச்பேக்;

பீட் ஹேட்ச்பேக்;

செவர்லே நிறுவனம், பீட் ஹேட்ச்பேக் மீது 4 கிராம் தங்க காசுகளை கொடுக்கின்றது. செவர்லே நிறுவனம், இந்த பீட் ஹேட்ச்பேக் மீது முதல் வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸ், 24,000 ரூபாய் மதிப்பு கொண்ட ரொக்க ஆதாயம் மற்றும் 20,000 மதிப்பு கொண்ட எக்ஸ்சேஞ்ச் போனஸ் அளிக்கிறது. இந்த அனைத்து சலுகைகளின் மொத்த மதிப்பு 74,000 ரூபாயாக உள்ளது.

தவேரா எம்பிவி;

தவேரா எம்பிவி;

செவர்லே நிறுவனம், தவேரா எம்பிவி மீது 52,000 ரூபாய் மதிப்பு கொண்ட சலுகைகளை தருகிறது. இதில், 15,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற முறையிலும், 25,000 ரூபாய் மதிப்பிலான ரொக்க ஆதாயம் உள்ளிட்டவை அடங்கும். இத்துடன், 4 கிராம் தங்க காசுகளும் அளிக்கப்படுகிறது.

சலுகைகள் கிடைக்கும் காலம்;

சலுகைகள் கிடைக்கும் காலம்;

செவர்லே நிறுவனம் வழங்கும் இந்த அனைத்து சலுகைகளும், ரொக்க ஆதாயங்களும், அக்டோபர் 31-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் வெற்றிகரமாக பறந்தது...!!

சாலை நடுவில் சாவகாசமாக சைக்கிள் பவனி... மீண்டும் சர்ச்சைக்குள்ளான சல்மான்...

தங்க நிறத்தில் தகதகக்கும் மலேசிய சுல்தானின் போயிங் ஜெட் விமானம்!

மேலும்... #செவர்லே #chevrolet
English summary
Chevrolet India provides its customers exciting offers and benefits during 2016 festive season. Maximum benefit worth Rs. 1.12 lakh can be availed. Minimum discount worth Rs. 52,000 is offered. All offers and benefits by Chevrolet India is available only until October 31, 2016. These offers are available in the form of exchange bonus and cash benefit etc. To know more, check here...
Story first published: Tuesday, October 4, 2016, 7:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark