செவர்லே ஸ்பின் எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

Written By:

செவர்லே ஸ்பின் எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

செவர்லே நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு விதமான தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில், செவர்லே ஸ்பின் எம்பிவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் 13-ஆம் பதிப்பில் அறிமுகம் செய்வது உறுதி செய்யபட்டுள்ளது.

chevrolet-spin-mpv-set-for-debut-in-2016-delhi-auto-expo

எப்போது அறிமுகம்?

இந்த செவர்லே ஸ்பின் எம்பிவி, இந்திய சந்தைகளில் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறித்து உறுதிபடுத்தபட்ட தகவல்களும் வெளியாகவில்லை. இந்திய வாகன சந்தைகளுக்கு 2017-ஆம் ஆண்டு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்ஜாய் எம்பிவி-க்கு மாற்று;

செவர்லே ஸ்பின் எம்பிவி-யானது, மெதுவாக விற்பனையாகும் செவர்லே எஞ்ஜாய் எம்பிவி-க்கு மாற்றாக அமைய உள்ளது. செவர்லே எஞ்ஜாய் எம்பிவி-யை காட்டிலும், செவர்லே ஸ்பின் எம்பிவி கூடுதல் மதிப்புமிக்க பிரிமியம் காராக விளங்குகிறது.

இஞ்ஜின்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின்கள் ஆகிய 2 தேர்வுகளில் கிடைக்கிறது.

செவர்லே ஸ்பின் எம்பிவி-யின் டீசல் இஞ்ஜின் 88.77 பிஹெச்பி-யையும், செவர்லே ஸ்பின் எம்பிவி-யின் பெட்ரோல் இஞ்ஜின் 102.57 பிஹெச்பி-யையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

இந்த 2 இஞ்ஜின்களுமே 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இவை முன் சக்கரங்களுக்கு (ஃப்ரண்ட் வீல்) பவரை பரிமாற்றம் செய்கின்றன.

போட்டி கார்கள்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, மாருதி சுஸுகி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ மற்றும் ரெனோ லாட்ஜி ஆகிய கார்களுடன் போட்டியை எதிர்கொள்ள நேரிடும்.

7 ஸீட்டர்;

செவர்லே ஸ்பின் எம்பிவி 7 ஸீட்டர் காராகவும், 3 வரிசையிலான ஸீட்டிங் (இருக்கை) அமைப்பும் கொண்டுள்ளதாக உள்ளது. அதிகப்படியான வசதிகளுக்காகவும், இட வசதிகளுக்காகவும், செவர்லே ஸ்பின் எம்பிவி காரின் ஸீட்களை ஃபோல்டிங் (மடங்கும்) வசதியுடன், செவர்லே நிறுவனம் வழங்க உள்ளது.

English summary
Chevrolet Spin MPV is all set for Indian Debut at 2016 Delhi Auto Expo. Chevrolet has planned to showcase many of its products at the 13th edition of the Auto Expo in Delhi. Testing of Spin by Chevrolet has commenced on Indian roads. Chevrolet Spin MPV would be introduced in India by early 2017.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X