விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாவிட்டால், இனி சிறை செல்ல நேரிடும்

By Ravichandran

இந்திய சாலைகளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு உதவாமல் கண்டும் காணாதது போல் செல்பவர்களுக்கு, இனி அபராதம் விதிக்கபடவோ அல்லது சிறை செல்ல வேண்டிய நிலை நேரிடலாம்.

இந்திய சாலைகளில் ஏராளமான விபத்துகள் நிகழ்கிறது. இதில் பெரும்பான்மையானவை அபாயகரமானதாக உள்ளன. இந்தியாவில் சுமார் 400 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 2015-ல் மட்டும், சுமார் 1.46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அதிகப்படியான மக்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர் அல்லது சக சாலை பயணிகளின் அக்கறையின்மையால் உயிரிழக்கின்றனர். அதிகப்படியான உயிரிழப்புகள் மிக குறைந்த அல்லது மருத்துவ உதவியின்மையால் உயிரிழக்கின்றனர். தனி நபர்கள் பிறருக்கு உதவி அஞ்சுவதால், உதவி செய்யாமல் நழுவிவிடுகின்றனர்.

இந்திய அரசாங்கம், போக்குவரத்து துறை (டிராஃபிக்) அதிகாரிகளுடன் இணைந்து இந்த பிரசனைக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளனர். இனிமேல், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாமல், சக சாலை பயணிகள் கடந்து சென்றால், போக்குவரத்து துறை அதிகாரிகள், மேற்கொள்ளும் முடிவின் படி, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதத்துடன் சேர்த்து சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

crash-victims-passersby-liable-for-fine-or-jail-time-or-both

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாமல் சென்றால், பிற டிரைவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். மேலும், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். நாம் இது போன்ற விஷயங்களை மிகுந்த தீவிரத்துடன் எடுத்து கொள்ள வேண்டும். அபராதமோ அல்லது தண்டனை விதிக்கப்பட்டால் தான் பிறருக்கு உதவ வேண்டும் என்று எதுவும் இல்லை. நாம் இப்படி மக்களுக்கு உதவுவது, ஒருவருக்கு ஒருவர் காட்டி கொள்ளும் குறைந்தபட்ச மனிதத்தன்மை ஆகும்.

பிற அபராதங்களாக, அதிகப்படியாக ரூபாய் 10,000 வசூலிக்கப்படுகிறது அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை என அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே லைசன்ஸ் ரத்து ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு குற்றங்களுக்கு, லைசன்ஸ் இடைநீக்கம் (சஸ்பென்ஷன்) செய்யபடுவதற்கும் ஒப்புதல் வழங்கபட்டுள்ளது.

Most Read Articles
English summary
Crash Victims should be helped by Passersby Passengers. Or else, Passerby Passengers are liable for fine or face Jail sentence also. If passerby are caught not helping an accident victim, they will be fined or face serious jail time or even both if the officials decide. Drivers could face fine of Rs. 2,000 or face maximum jail punishment of 6 months. To know more, check here...
Story first published: Wednesday, May 25, 2016, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X