சென்னையில் ஃபோர்டு எண்டெவருக்கு 8 மாதங்கள் வெயிட்டிங் பீரியட்... வாசகரின் அதிருப்தி அனுபவம்!

Written By:

கடந்த ஜனவரி மாதம் புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு விதத்திலும் மேம்படுத்தப்பட்டு வந்த இந்த புதிய எஸ்யூவியை வாங்குவதற்கு பல வாடிக்கையாளர்கள் ஆவலுடன் ஷோரூமுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதேபோன்று, இந்த புதிய எஸ்யூவியை வாங்குவதற்கு காத்திருந்து ஆவலாக காத்திருந்தவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த ஆஷ்லி கோஷி.

டிரேடர் கோஷி என்ற பெயரில் இயற்கை வேளாண் பண்ணை நடத்தி வரும் இவர், சமீபத்தில் சென்னையிலுள்ள பிரபல ஃபோர்டு ஷோரூமுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் வாங்க முடிவு செய்திருந்த எண்டெவர் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டுக்கான வெயிட்டிங் பீரியடை கேட்டவுடன் அவருக்கு தூக்கி வாரி போட்டுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த அவர் அந்த அனுபவத்தை டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

வாகன பிரியர்

வாகன பிரியர்

ஆஷ்லி கோஷி இயற்கை வேளாண்மையில் மட்டுமல்ல, வாகனங்கள் மீது தீராத காதல் கொண்டவர். புதிதாக கார் வாங்க எண்ணிக் கொண்டிருந்த அவருக்கு புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்கள் அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருந்தது. எனவே, ஃபோர்டு எண்டெவரை வாங்குவதற்காக ஷோரூம் சென்றிருக்கிறார்.

விருப்ப மாடல்

விருப்ப மாடல்

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் 3.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட டாப் வேரியண்ட்டை வாங்க முடிவு செய்து முன்பதிவு செய்ய தீர்மானித்துவிட்டார் கோஷி.

வெயிட்டிங் பீரியட்

வெயிட்டிங் பீரியட்

ஆனால், ஃபோர்டு ஷோரூமில் அவர் விரும்பிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிக்கு 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினராம். இது கேட்டு தூக்கி வாரி போட்டவுடன், சென்னையிலுள்ள பிற ஃபோர்டு ஷோரூம்களிலும் விசாரணை போட்டுள்ளார். ஆனால், அங்கேயும் இதே பதிலைத்தான் கூறியுள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

ஆசையாய் வாங்கப் போன ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிக்கு 8 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் என்றவுடன் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார் கோஷி. வேறு மாடலை வாங்கலாமே என்றால், செவர்லே ட்ரெயில்பிளேசரையும் பார்த்தேன். ஆனால், ஃபோர்டு எண்டெவர் அளவுக்கு சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் ஆஃப்ரோடு சிறப்பம்சங்கள் அதில் இல்லை என்று கூறினார்.

போட்டி

போட்டி

கடும் சந்தைப் போட்டி நிலவும் இந்த சூழலில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிக்கு இத்தனை மாதங்கள் வெயிட்டிங் பீரியடை வைத்திருப்பதற்கான காரணம் புரியவில்லை. பட்ஜெட் மாடல்களுக்கு, அதிக முன்பதிவு செய்யப்படும் மாடல்களுக்கு பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட் இருப்பதை தவிர்க்க இயலாது.

மற்றொரு விஷயம்

மற்றொரு விஷயம்

கோஷி முன்பதிவு செய்ய முடிவு செய்திருந்த 3.2 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல் சென்னையில் ரூ.35 லட்சம் ஆன்ரோடு விலை கொண்டது. பட்ஜெட் சிறிது அதிகமானாலும், தனது எதிர்பார்ப்புகளுக்கு தக்க மாடலாக கருதியே முன்பதிவு செய்ய சென்றிருக்கிறார்.

பட்ஜெட்

பட்ஜெட்

ஏனெனில், ரூ.35 லட்சத்தை தாண்டிய பட்ஜெட் வைத்திருக்கும் ஒருவர் ஆடி க்யூ3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ போன்ற மாடல்களின் பக்கம்தான் கவனம் செல்லும். சற்றே பட்ஜெட் அதிகமானாலும் சொகுசு பிராண்டு அந்தஸ்து கிடைத்துவிடும். அதையும் மீறி வரும் வாடிக்கையாளருக்கு இப்படியொரு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்து அனுப்புகிறது ஃபோர்டு.

கோஷி ஃபேஸ்புக் பக்கம்

கோஷி ஃபேஸ்புக் பக்கம்

டிரேடர் கோஷி ஃபேஸ்புக் பக்கம்!

 
English summary
Customer View: 8 Months Waiting Is Too Long For The Ford Endeavour.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark