டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10 நிறைவு : டோபி பிரைஸ், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முன்னிலை

Written By:

இன்று நிறைவடைந்த டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10-ல், டோபி பிரைஸ், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முன்னிலையில் உள்ளனர்.

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10 குறித்த முக்கிய தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டோபி பிரைஸ், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முன்னிலை;

டோபி பிரைஸ், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முன்னிலை;

2016 டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10-ன் மோட்டார்சைக்கிள் பிரிவில், டோபி பிரைஸ் வெற்றி அடைந்துள்ளார். இதையடுத்து, இந்த ஆஸ்திரேலிய ரைடர் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.

ஸ்டெஜ் 10-ன் கார் பிரிவில், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

யாருக்கெல்லாம் பின்னடைவு?

யாருக்கெல்லாம் பின்னடைவு?

2016 டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10-ல், கார்லோஸ் சேன்ஸ் நாஸர் அல்-அட்டையாஹ் அவர்களுக்கும் பின்னடைவுகள் ஏற்பட்டது.

ஸ்டெஜ் 10-ன் நிறைவு கட்டத்தில் கார்லோஸ் சேன்ஸ், தனது பியூகாட் வாகனத்தில் சில கோளாறுகளை எதிர்கொண்டார்.

ஆனால், நாஸர் அல்-அட்டையாஹ் தனது மினி வாகனத்தை எப்படியோ சமாளித்து இயக்கி கொண்டிருந்தார். இறுதியில் இருவருமே ஸ்டெஜ் 10-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10-ல், மோட்டார்சைக்கிள் பிரிவில், ஸ்டெஃபான் ஸ்விட்கோ முதல் இடத்தை பிடித்தார். கெவின் பெனாவிட்ஸ் 2-வது இடத்தையும், டோபி பிரைஸ் 3-வது இடத்தையும், பிடித்தனர்.

ஹோண்டா வாகனத்தை இயக்கி சென்ற பாவ்லோ கொன்சால்வெஸ், மாலை முழுவதும் தனது மோட்டார்சைக்கிள் உடன் அவதிபட்டி கொண்டிருந்தார். பின்னர், தனது சக அணியினரின் உதவியுடன் மோட்டார்சைக்கிள் சரி செய்து கொண்டு, ஸ்டெஜ் 10-ஐ 4-வது இடத்தில் நிறைவு செய்தார்.

கார் பிரிவில் முன்னிலை;

கார் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 10-ன் கார் பிரிவில், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்த இடத்தை பியூகாட் வாகனத்தில் சென்ற சிரில் டெஸ்ப்ரெஸ் அடைந்தார்.

கார்லோஸ் சேன்ஸ் 61-வது இடத்தையும், நாஸர் அல்-அட்டையாஹ் 14-வது இடத்தையும் பிடித்தனர். மினி வாகனத்தை உபயோகித்த நாஸர் அல்-அட்டையாஹ் 14-வது இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில், நாஸர் அல்-அட்டையாஹ் 2-வது இடத்தில் உள்ளார்.

குவாட் பிரிவில் முன்னிலை;

குவாட் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 10-ன் குவாட் பிரிவில், யமஹா வாகனத்தை இயக்கிய பிரையன் பாரக்வநாத் முதல் இடத்தை கைப்பற்றினார். மார்கோஸ் பாட்ரோனெல்லி 2-வது இடத்தை பிடித்தார்.

டிரக் பிரிவில் முன்னிலை;

டிரக் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 10-ன் டிரக் பிரிவில், பாஸ்கல் டி பார் முதல் இடத்தை பிடித்தார். ஜெரார்ட் டீ ரூய் இரண்டாவது இடத்தை பெற்றார்.

2016 டக்கார் ஸ்டெஜ் 10-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 10-ன் முடிவுகள்;

மோட்டார்சைக்கிள்கள் பிரிவு;

1) ஸ்டெஃபான் ஸ்விட்கோ, (ஸ்லோவாகியா), கேடிஎம்

2) கெவின் பெனாவிட்ஸ், (அர்ஜெண்ட்டினா), ஹோண்டா

3) டோபி பிரைஸ், (ஆஸ்திரேலியா), கேடிஎம்

2016 டக்கார் ஸ்டெஜ் 10-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 10-ன் முடிவுகள்;

கார்கள் பிரிவு;

1) ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல், (ஃபிரான்ஸ்), பியூகாட்

2) சிரில் டெஸ்ப்ரெஸ், (ஃபிரான்ஸ்), பியூகாட்

3) விளாடிமிர் வசில்யெவ், (ரஷ்யா), டொயோட்டா

2016 டக்கார் ஸ்டெஜ் 10-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 10-ன் முடிவுகள்;

குவாட் பிரிவு;

1) பிரையன் பாரக்வநாத், (தென் ஆஃப்ரிகா), யமஹா

2) மார்கோஸ் பாட்ரோனெல்லி, (அர்ஜெண்ட்டினா), யமஹா

3) அலெஜாண்ட்ரோ பாட்ரோனெல்லி, (அர்ஜெண்ட்டினா), யமஹா

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

டிரக்குகள் பிரிவு;

1) பாஸ்கல் டீ பார், (நெதர்லாந்து), ரெனோ டிரக்ஸ்

2) ஜெரார்ட் டீ ரூய், (நெதர்லாந்து), ஐவிகோ

3) ஐராட் மார்டீவ், (ரஷ்யா), கமாஸ்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 9 நிறைவு - டோபி பிரைஸ் முன்னிலை

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 8 நிறைவு பெற்றது - விரிவானத் தகவல்கள்

2016-ம் ஆண்டு டக்கார் ராலியிலிருந்து வெளியேறினார் சி.எஸ்.சந்தோஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Stage 10 of the Dakar Rally has ended. In 2016 Dakar Rally, in Stage 10, the Australian and KTM rider Toby Price is leading the overall ranking in the motorcycle category and Stephane Peterhansel leads the overall ranking of the car category. Stage 10 did not go well for Carlos Sainz and last year's winner Nasser Al-Attiyah.
Story first published: Thursday, January 14, 2016, 15:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark