டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3 - இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 61-வது இடத்தில் நிறைவு செய்தார்
டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3 (நிலை-3) - ல், இந்தியாவை சேர்ந்த சி.எஸ்.சந்தோஷ் 61-வது இடத்தில் நிறைவு செய்தார். டக்கார் ராலி தான் உலகில் மிக அதிகமான கஷ்டமான மற்றும் மிகவும் எதிர்பார்க்கபடும் ராலியாக விளங்குகிறது.
டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3 குறித்த இன்றைய முக்கிய தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

முன்னேற்றம் கண்ட சி.எஸ்.சந்தோஷ்;
டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3, இன்று முடிவடைந்துள்ளது. ஸ்டேஜ் 3-ல், சி.எஸ்.சந்தோஷ் 61-வது இடத்தில் நிறைவு செய்தார்.
ஒட்டுமொத்த நிலைபாட்டில், ஸ்டேஜ் 3 நிறைவுக்கு பின்னர் சி.எஸ்.சந்தோஷ் 79-வது இடத்தில் உள்ளார்.
மோசமான வானிலை காரணமாக, மொத்தம் 664 கிலோமீட்டர் தூரமாக இருந்த ஸ்டேஜ் 3-ன் தூரம், 626 கிலோமீட்டராக குறைக்கபட்டது. இதில் 190 கிலோமீட்டருக்கான பிரத்யேகமான ஸ்டேஜும் இருந்தது.

பெனால்டி வழங்கபட்ட ஜான் பார்ரெடா;
ஸ்டேஜ் 3-ன் மோட்டார்சைக்கிள் பிரிவில், ஜான் பார்ரெடா தான் முதன்மையான இடத்தை பெற்றார். ஆனால், அவருக்கு ஒரு நிமிட நேரத்திற்கான அபராதம் விதிக்கபட்டது. இதனால், அவர் அடைந்த வெற்றியை இழக்க நேரிட்டது.
ஸ்டேஜ் 3-ன் வெற்றியை, அர்ஜெண்டினாவின் கெவின் பெனாவிட்ஸ் பெற்றார். இவர் ஜான் பார்ரெடாவுக்கு கடுமையான போட்டியாக விளங்கினார்.
ஸ்டேஜ் 2-ல் முன்னிலை வகித்த டோபி பிரைஸ், ஸ்டேஜ் 3-ல், பார்வையாளர்கள் மற்றும் விலங்குகள் ரூபத்தில் சில இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதனால், இந்த ஆஸ்திரேலிய ரைடர் வேகத்தை குறைக்க நேர்ந்தது. இந்த இடைவெளியில், செக் பாயிண்ட் 1-ல் முன்னேற துவங்கிய ஜான் பார்ரெடா, ஸ்டேஜ் 3-ன் இறுதி வரை முன்னிலையை தக்க வைத்து கொண்டார்.

குவாட் பிரிவில் பிரையன் முன்னிலை;
குவாட் பிரிவில் பிரையன் பரக்வநாத் ஸ்டேஜ் 3-ல் வெற்றி பெற்றார்.
இடையில், ஸ்டேஜ் 3-ன் மத்தியில் இக்னாஸியோ கஸாலே-விடம் அவரின் முன்னிலையை கொஞ்ச நேரம் இழக்க நேரிட்டது.

கார் பிரிவில் செபாஸ்டியன் முன்னிலை;
ஸ்டேஜ் 3-ன் கார் பிரிவில், வேர்ல்ட் ராலி செபாஸ்டியன் லோப் முன்னிலை வகித்தார். இது தனது முதலாவது டக்கார் ராலியாக இருக்கும் பட்சத்திலும், இது வரை முடிவடைந்த 3 ஸ்டேஜ்களில், செபாஸ்டியன் லோப் 2 ஸ்டேஜ்களில் வெற்றி பெற்றுள்ளார்.
செபாஸ்டியன் லோப்-புக்கு அடுத்தபடியாக, கார்லோஸ் சேன்ஸ் 2-வது இடத்திலும், 2015 டக்கார் ராலியின் வெற்றியாளரான நாஸ்ஸர் அல்-அட்டையாஹ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

டிரக்கு பிரிவில் யார் முன்னிலை?
ஸ்டேஜ் 3-ன் டிரக்கு பிரிவில், மார்ட்டின் கோலோமி தான் வெற்றி பெற்றார். இது அவரின் முதலாவது டக்கார் ஸ்டேஜ் வெற்றி என்பது குறிப்பிடதக்கது.

2016 டக்கார் ஸ்டேஜ் 3-ன் முடிவுகள்;
மோட்டார்சைக்கிள்கள் பிரிவு;
1) கெவின் பெனாவிட்ஸ், (அர்ஜெண்ட்டினா), ஹோண்டா
2) பாவ்லோ கொன்சால்வெஸ், (போர்சுகல்), ஹோண்டா
3) ஆண்டனி மியோ, (ஃபிரான்ஸ்), கேடிஎம்

2016 டக்கார் ஸ்டேஜ் 3-ன் முடிவுகள்;
குவாட் பிரிவு;
1) பிரையன் பரக்வநாத், (தென் ஆஃப்ரிகா), யமஹா
2) இக்னாஸியோ கஸாலே, (சிலி), யமஹா
3) லூகாஸ் பானெட்டோ, (அர்ஜெண்ட்டினா), ஹோண்டா

2016 டக்கார் ஸ்டேஜ் 3-ன் முடிவுகள்;
கார்கள்;
1) செபாஸ்டியன் லோப், (பிரான்ஸ்), பியூகாட்
2) கார்லோஸ் சேன்ஸ், (ஸ்பெயின்), பியூகாட்
3) நாஸ்ஸர் அல்-அட்டையாஹ், (கத்தார்), மினி

2016 டக்கார் ஸ்டேஜ் 3-ன் முடிவுகள்;
டிரக்குகள்;
1) மார்ட்டின் கோலோமி, (செக் குடியரசு), டடரா
2) ஹான்ஸ் ஸ்டேஸி, (நெதர்லாந்து), எம்ஏஎன்
3) ஃபெடரிக்கோ வில்லாக்ரா, (அர்ஜெண்டினா), ஐவீஇசிஓ (ஐவிக்கோ)


Click it and Unblock the Notifications








