2016-ம் ஆண்டு டக்கார் ராலியிலிருந்து வெளியேறினார் சி.எஸ்.சந்தோஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

By Ravichandran

2016-ஆம் ஆண்டின் டக்கார் ராலி போட்டியிலிருந்து இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் வெளியேறினார். இது இந்திய மோட்டார் பந்தய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டக்கார் ராலியின் முந்தைய சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக முன்னேறி வந்த சி.எஸ்.சந்தோஷ் நான்காம் சுற்றுப் போட்டியின்போது ஏற்பட்ட பிரச்னைகளால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதையடுத்து, இன்று நிறைவடைந்த டக்கார் ராலியின் நான்காவது சுற்றுடன் போட்டியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். டக்கார் ராலியின் நான்காவது சுற்றுப் போட்டி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டேஜ் 4 பற்றி...

ஸ்டேஜ் 4 பற்றி...

இன்று நிறைவடைந்த ஸ்டேஜ் 4-ல் சில வருத்தமான நிகழ்வுகள் தான் அதிகமாக நிகழந்தது. முக்கியமாக, இந்தியாவை சேர்ந்த ஒரே வீரரான சி.எஸ்.சந்தோஷ், 2016-ஆம் ஆண்டின் டக்கார் ராலியில் இருந்தே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுஸுகி 450 ஆர்எம்இசட் மோட்டார்சைக்கிளை உபயோகித்து கொண்டிருந்த பெங்களூரூவின் சி.எஸ்.சந்தோஷ், ஸ்டேஜ் 4-ல் 127-வது இடத்தில் நிறைவு செய்ய வேண்டி இருந்தது. இதனால், ஒட்டுமொத்த மதிப்பீடுகளில் அவர் 116-வது இடத்திற்கு சறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நேவிகேஷன் இன்றி சென்ற சி.எஸ்.சந்தோஷ்;

நேவிகேஷன் இன்றி சென்ற சி.எஸ்.சந்தோஷ்;

இன்று நிறைவடைந்த ஸ்டேஜ் 4-ன் போது, நேவிகேஷன் டவர் பழுதடைந்ததோடு மட்டுமல்லாமல், சில எலக்ட்ரிகல் கோளாறுகளும் நிகழ்ந்தது.

இதனால், சி.எஸ்.சந்தோஷ் ஸ்டேஜ் 3-ல் தக்கவைத்திருந்த நிலையை இழக்க நேரிட்டு, ரேங்கிங் பட்டியலிளும் சரிவை சந்தித்தார். நேவிகேஷன் வசதியே இல்லாமலேயே, சி.எஸ்.சந்தோஷ் சுமார் 300 கிலோமீட்டர் வரை பந்தயப்பாதையை கடந்து சென்றார்.

தலையில் காயங்கள் எதிர்கொண்ட ரெனெட்;

தலையில் காயங்கள் எதிர்கொண்ட ரெனெட்;

இன்று, இன்னும் சில வருத்தமான நிகழ்வுகள் நடைபெற்றது. ஸ்பெஷல் செக்‌ஷனின் இறுதியில் ஏற்பட்ட கிராஷை அடுத்து, பெலெ ரெனெட் தலையில் காயங்கள் எதிர் கொண்டார்.

முன்னோடிகள்;

முன்னோடிகள்;

ஹெச்ஆர்சி-யை இயக்கி கொண்டிருந்த பாவ்லோ கொன்சால்வேஸ், ஸ்டேஜ் 4-ல் மோட்டார்சைக்கிள் பிரிவில் முதன்மையான இடத்தில் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக ஹோண்டாவை இயக்கிய கெவின் பெனாவிட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

குவாட் பிரிவில் அலெக்சிஸ் ஹெர்னாண்டஸ் முதன்மையான இடத்தை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, மார்கோஸ் பேட்ரோனெல்லி உள்ளார்.

கார்கள் பிரிவில், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்செல் முதல் இடத்தை பிடித்தார், 9 முறை டபுள்யூஆர்சி சேம்பியன் லோப் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தார்.

டிரக்கு பிரிவில், ஜெரார்ட் டி ரூய் முதன்மையான இடத்தை அடைந்தார்.

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

மோட்டார்சைக்கிள்கள் பிரிவு;

1) பாவ்லோ கொன்சால்வெஸ், (போர்சுகல்), ஹோண்டா

2) கெவின் பெனாவிட்ஸ், (அர்ஜெண்ட்டினா), ஹோண்டா

3) ஃபாரியா, (போர்சுகல்), ஹஸ்க்வர்னா

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

குவாட் பிரிவு;

1) அலெக்சிஸ் ஹெர்னாண்டஸ், (பெரு), யமஹா

2) மார்கோஸ் பேட்ரோனெல்லி, (அர்ஜெண்ட்டினா), யமஹா

3) உம்பெர்ட் ஒகுமாரா, (பெரு), யமஹா

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

கார்கள் பிரிவு;

1) ஸ்டெஃபான் பீட்டர்ஹன்செல், (பிரான்ஸ்), பியூகாட்

2) கார்லோஸ் சேன்ஸ், (ஸ்பெயின்), பியூகாட்

3) செபாஸ்டியன் லோப், (பிரான்ஸ்), பியூகாட்

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 4-ன் முடிவுகள்;

டிரக் பிரிவு;

1) ஜெரார்ட் டீ ரூய், (நெதர்லாந்து), ஐவீஇசிஓ (ஐவிக்கோ)

2) வெர்ஸ்லூயிஸ், (நெதர்லாந்து), எம்ஏஎன்

3) ஹான்ஸ் ஸ்டேஸி, (நெதர்லாந்து), எம்ஏஎன்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3 - இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 61-வது இடத்தில் நிறைவு செய்தார்

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 2 - இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 86-வது இடத்தில் நிறைவு செய்தார்

டக்கார் ராலியில் முதல் இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் அசத்தல்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Stage 4 of the 2016 Dakar Rally concluded today. This stage 4 has ended with some bad news as CS Santosh was forced to sign off Dakar Rally. The Bangalore rider rode Suzuki 450 RMZ managed to finish stage 4 in 127th position. By this, he dropped in his overall standings down to 116.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X