டக்கார் ராலியின், ஸ்டேஜ் 7 நிறைவடைந்துள்ளது... முக்கியத் தகவல்கள்

By Ravichandran

விறுவிறுப்பாக நடந்து வரும் டக்கார் ராலியின், ஸ்டேஜ் 7 இன்று நிறைவடைந்துள்ளது. இந்த சுற்றின்போது, இந்த ஆண்டு டக்கார் ராலியன் முதல் மரணமும் நிகழ்ந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெற்று முடிந்த டக்கார் ராலியின் ஸ்டேஜ் 7 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கார்கள் பிரிவில் முன்னிலை;

கார்கள் பிரிவில் முன்னிலை;

2016-ஆம் ஆண்டின் இந்த டக்கார் ராலியின், ஸ்டேஜ் 7-ல் கார்கள் பிரிவில், ஸ்பெய்ன் நாட்டு டிரைவர் கார்லோஸ் செய்ன்ஸ், முன்னிலை பெற்றுள்ளார்.

செபாஸ்டியன் லோப் இரண்டாவது இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டின் டக்கார் ராலி சாம்பியன் நாஸர் அல்-அட்டையாஹ் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

ஸ்டேஜ் 7-ன் மோட்டார்சைக்கிள் பிரிவில், ஆண்டோனியோ மியோ முதல் இடத்தை பிடித்தார். இவர் கேடிஎம் மோட்டார்சைக்கிளை உபயோகித்தார். ஹெச்ஆர்சி இயக்கிய கெவின் பெனாவிட்ஸ் 2-வது இடத்தை பிடித்திருந்தார்.

கேடிஎம் ரைடர் மத்தியாஸ் வால்க்னர் விபத்தில் சிக்கி, தொடை எலும்பு உடைந்து அவதியில் இருந்தார். அவருக்கு உதவிய காரணத்தால், பாவ்லோ கொன்சால்வேஸ்-க்கு சுமார் 11 புள்ளிகள் கூடுதலாக வழங்கபட்டது. இதனால், பாவ்லோ கொன்சால்வேஸ் 3-து இடத்தை பிடித்தார்.

குவாட் பிரிவில் முன்னிலை;

குவாட் பிரிவில் முன்னிலை;

குவாட் பிரிவில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த யமஹாவின் ஆதிக்கத்துக்கு முற்றுபுள்ளி வைக்கபட்டுள்ளது. குவாட் பிரிவில், லூகாஸ் போனெட்டோ முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பாப்லோ கோபெட்டி இரண்டாவது இடத்தையும், வால்டர் நோஸிக்லியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டிரக் பிரிவில் முன்னிலை;

டிரக் பிரிவில் முன்னிலை;

டிரக் பிரிவில், ஸ்டேஜ் 7-ல் எடுவார்ட் நிகோலேவ், தனது சக-அணி வீரர் ஐரட் மார்டீவ் என்பவரை முந்தி, முதல் இடத்தை பிடித்தார்.

2016 டக்கார் ராலியில் முதல் மரணம்;

2016 டக்கார் ராலியில் முதல் மரணம்;

ஸ்டேஜ் 7-ல், 2016 டக்கார் ராலியின் முதல் மரணம் பதிவாகியது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லியோனல் பௌட் இயக்கி வந்த மிட்சுபிஷி லேன்ஸர் வாகனம், 63-வது பார்வையாளர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

மோட்டார்சைக்கிள்கள் பிரிவு;

1) ஆண்டனி மியோ, (ஃபிரான்ஸ்), கேடிஎம்

2) கெவின் பெனவிட்ஸ், (அர்ஜெண்டினா), ஹோண்டா

3) பாவ்லோ கொன்சால்வெஸ், (போர்சுகல்), ஹோண்டா

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

குவாட் பிரிவு;

1) லூகாஸ் பானெட்டோ, (அர்ஜெண்ட்டினா), ஹோண்டா

2) பாப்லோ கோபெட்டி, (அர்ஜெண்ட்டினா), யமஹா

3) வால்டர் நோஸிக்லியா, (பொலிவியா), ஹோண்டா

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

கார்கள்;

1) கார்லோஸ் சேன்ஸ், (ஸ்பெயின்), பியூகாட்

2) செபாஸ்டியன் லோப், (பிரான்ஸ்), பியூகாட்

3) நாஸ்ஸர் அல்-அட்டையாஹ், (கத்தார்), மினி

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 7-ன் முடிவுகள்;

டிரக்குகள்;

1) எடுவார்ட் நிகோலேவ், (ரஷ்யா), கமாஸ்

2) ஐரட் மார்டீவ், (ரஷ்யா), கமாஸ்

3) பீட்டர் வெர்ஸ்லூயிஸ், (நெதர்லாந்து), எம்ஏஎன்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016-ம் ஆண்டு டக்கார் ராலியிலிருந்து வெளியேறினார் சி.எஸ்.சந்தோஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3 - இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 61-வது இடத்தில் நிறைவு செய்தார்

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 2 - இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 86-வது இடத்தில் நிறைவு செய்தார்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Stage 7 of the 2016 Dakar Rally has ended. Spanish driver Carlos Sainz has got first place. Sebastien Loeb, ended up stage 7 in second place. Last year's Dakar Champion, Nasser Al-Attiyah who was in the Mini finished in third place. First Death was recorded in Stage 7 of 2016 Dakar Rally, as a spectator died on the spot, due to Crash.
Story first published: Monday, January 11, 2016, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X