ஹோலி பண்டிகையை முன்னிட்டு, டட்சன் கார்கள் புதிய நிறத்தில் அறிமுகம்

Written By:

ஹோலி பண்டிகை இந்தியாவிலும், உலகின் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடபடுகிறது.

வண்ணங்களின் பண்டிகையான ஹோலியை, டட்சன் இந்தியா நிறுவனமும் ஒரு ஸ்பெஷலான முறையில் கொண்டாடுகிறது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டட்சன், ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்களின் கார்களை ஒரு பிரத்யேக நிற தேர்வில் வழங்குகிறது. டட்சன் ஷோரூம்களிலும், பண்டிகை காலத்தின் போது, இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் புதிய நிற தேர்வுடனும், தள்ளுபடிகளுடனும் வழங்கபடுகிறது.

டட்சன் வழங்கும் புதிய நிற தேர்வு, 'எலக்ட்ரிஃபையிங் புளூ' என்று அழைக்கபடுகிறது. கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ+ காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன் ஆகிய மாடல்கள், இந்த எலக்ட்ரிஃபையிங் புளூ வண்ணத்தில் கிடைக்கிறது. ஹோலி பண்டிகைக்கு பின்னர், இந்த புதிய எலக்ட்ரிஃபையிங் புளூ வண்ணத்தையும் சேர்த்து, டட்சன் தயாரிப்புகள் மொத்தம் 6 வண்ணங்களில் இந்தியா முழுவதும் வழங்கப்படும்.

டட்சனின் கோ+, ஈர்க்கும் வகையிலான ஃபைனான்ஸ் தேர்வுடன் கிடைக்கிறது. டட்சன் டீலர்ஷிப்கள், இந்த மாடல் மீது 8.99% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கடன் ஃபைனான்ஸ் தேர்வுகள் வழங்குகின்றனர். மேலும், இந்த காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன் மீது முதல்-வருட இன்சூரன்ஸும் வழங்கபடுகிறது. மேலும், இந்த கோ+ ஸ்பெஷலான விலையில் கிடைக்கும் என டட்சன் கூறுகிறது.

datsun-go-and-go-plus-electrifying-blue-for-holi-festival

ஆச்சர்யபடும் விதமாக, கோ ஹேட்ச்பேக் ஈர்க்கும் விலையில் கிடைக்கும். ஃபைனான்ஸ் தேர்வுகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 8.99% வட்டியில் கடன் வழங்கபடும். டட்சன் இந்தியா, இந்த அனைத்து ஆதாயங்களையும், தள்ளுபடிகளையும் மார்ச் இறுதி வரை மட்டுமே வழங்குகிறது.

தற்போதைய நிலையில், டட்சன் நிறுவனம் இந்திய வாகன சந்தைகளில் கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ+ காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன் ஆகிய 2 மாடல்களை மட்டுமே வழங்கி வருகிறது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கோ மாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ள, விரைவில் வெளியாக உள்ள கோ கிராஸ் மாடல் காட்சிபடுத்தபட்டது.

English summary
Holi Festival is celebrated grandly in India and around the World. Datsun India is also celebrating Holi by introducing their Products in a new Color scheme. Go hatchback and Go+ compact station wagon will be available with a special colour called Electrifying Blue. Plus, there are special offers, discounts and attractive finance schemes. To know more, check here...
Story first published: Thursday, March 24, 2016, 19:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark