டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

By Ravichandran

டட்சன் கோ க்ராஸ் கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தபடுவதற்கு முன்பே, அதன் படங்கள் வெளியிடபட்டு டீஸ் செய்யபட்டுள்ளது.

சமீபத்தில் டீஸ் செய்யபட்ட, டட்சன் கோ க்ராஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டட்சன் கோ க்ராஸ் பற்றி...

டட்சன் கோ க்ராஸ் பற்றி...

டட்சன் நிறுவனம் மூலம் தயாரிக்கபடும், டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி தான் சர்வதேச சந்தைகளுக்கு காட்சிபடுத்தபடும் முதல் கிராஸ்ஓவர் கார ஆகும்.

இந்த கிராஸ்ஓவர் மாடலை, டட்சன் கோ க்ராஸ் என அந்த நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன்;

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன்;

டட்சன் இந்தியா, தங்கள் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் பல்வேறு தயாரிப்புகளை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

2016-ல் அறிமுகம்?

2016-ல் அறிமுகம்?

டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி, 2016-ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற மாடல்களின் அறிமுகத்தை காட்டிலும், டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி-யின் அறிமுகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடுவதாக தெரிகிறது.

தற்போது கிடைக்கும் மாடல்கள்;

தற்போது கிடைக்கும் மாடல்கள்;

டட்சன் இந்தியா நிறுவனம், தற்போதைய நிலையில் கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ+ காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன் உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

கோ ஹேட்ச்பேக் தான், பிற மாடல்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. டட்சன் கோ க்ராஸ் மாடலும், கோ ஹேட்ச்பேக்-கையே அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

ஒரு சில அம்சங்கள் சேர்க்கபடுவதை தவிர்த்து, டட்சன் கோ க்ராஸ் மாடலின் ஒட்டுமொத்த டிசைனில் வேறு எந்த விதமான மாற்றங்களும் செய்யபட மாட்டாது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டட்சனின் கோ மற்றும் கோ+ கார்களில் உபயோகிக்கபடும் அதே இஞ்ஜின்கள் தான், டட்சன் கோ க்ராஸ் மாடலிலும் உபயோகிக்கபட உள்ளது.

டட்சன் கோ க்ராஸ் காருக்கு, டட்சன் இந்தியா நிறுவனம் 1.2 லிட்டர், 3-சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின் கிடையாது;

டீசல் இஞ்ஜின் கிடையாது;

டட்சன் கோ க்ராஸ் கார், டீசல் இஞ்ஜின் தேர்வுடன் வழங்கபட மாட்டாது என அறிவிக்கபட்டுள்ளது.

ஏஎம்டி கியர்பாக்ஸும் கிடையாது;

ஏஎம்டி கியர்பாக்ஸும் கிடையாது;

டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி காருக்கு, தேர்வு முறையிலான (ஆப்ஷனல்) ஏஎம்டி அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் வழங்கபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்திய அறிமுகம்?

இந்திய அறிமுகம்?

டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி-யின் இந்திய சந்தைகளுக்கான அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போதே நிகழ்த்தபடும் என தகவல்கள் வெளியாகிறது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஸ்டைலிங் பொருத்த வரை, பெரும்பான்மையான கான்செப்ட் டிசைன் மற்றும் கூறுகளை மாற்றாமல் தக்கவைத்து கொண்டாலே, டட்சன் கோ க்ராஸ் அதற்கு எழும் போட்டிகளை வெற்றிகரமாக சமாளித்து கொள்ளலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெடி-கோ காருக்கு முன்பே டட்சன் கோக்ராஸ் எஸ்யூவி அறிமுகம்... பரபரப்பு தகவல்கள்

டட்சன் பிராண்டில் புதிய கிராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்திய நிசான்

டட்சன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Datsun Go-Cross was teased ahead of its Debut at the 2016 Auto Expo. Datsun India is in plans to showcase many of its interesting products at the 2016 Auto Expo. Datsun has named their new crossover model as the Go-Cross. It is supposed that, Datsun could launch their Go-Cross model in this 2016 itself.
Story first published: Wednesday, January 20, 2016, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X