பண்டிகை காலத்தில் டட்சன் வழங்கும் தங்க நாணயம் கொண்ட சலுகைகள்

Written By:

டட்சன் நிறுவனம், பண்டிகை காலங்களை ஒட்டி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்த பண்டிகை காலங்களை ஒட்டி பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்கின்றனர் அல்லது மேம்பாடுகள் செய்யப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

டட்சன் நிறுவனம் வழங்கும் சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும், இந்த பண்டிகை காலங்களை கொண்டாடும் வகையில், ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், டட்சன் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சில பண்டிகை கால சலுகைகளை அளிக்கிறது. தற்போது டட்சன் தயாரிப்புகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு உள்ளது. மேலும், செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன்னதாக புக்கிங் செய்யும் அனைத்து டட்சன் தயாரிப்புகளுக்கும் ஸ்பெஷல் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கும்.

ரெடி-கோ;

ரெடி-கோ;

டட்சன் ரெடி-கோ கார் மீது, இந்தியா முழுவதும் 8.99% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் கடன் வசதி பெறலாம். மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை புக்கிங் செய்யப்படும் அனைத்து டட்சன் ரெடி-கோ மாடலுக்கு ஒரு தங்க நாணயம் இலவசமாக அளிக்கப்படும்.

கோ+;

கோ+;

டட்சன் கோ+ மீது டட்சன் இந்தியா டீலர்ஷிப்கள், முதல் வருட இன்சூரன்ஸ் இலவசமாக தருகின்றனர். மேலும், 8.99% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் கடன் வசதி கிடைக்கிறது. கூடுதலாக, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை புக்கிங் செய்யப்படும் அனைத்து டட்சன் கோ+ மாடலுக்கும், ஒரு தங்க நாணயம் இலவசமாக கிடைக்கும்.

கோ ஹேட்ச்பேக்;

கோ ஹேட்ச்பேக்;

டட்சன் கோ ஹேட்ச்பேக் மீதும் 8.99% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் பைனான்ஸ் வசதி கிடைக்கும். இதோடு மட்டுமின்றி, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள்ளாக டட்சன் கோ ஹேட்ச்பேக் புக்கிங் செய்தால் ஒரு தங்க நாணயம் இலவசமாக கிடைக்கிறது.

ஸ்பெஷல் எடிஷன்;

ஸ்பெஷல் எடிஷன்;

பண்டிகை காலங்களை ஒட்டி, டட்சன் நிறுவனம் ஒரு ஸ்பெஷல் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்கின்றனர். டட்சன் ரெடி-கோ மாடலானது, ஸ்போர்ட் எடிஷன் மாடலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் எடிஷன் மாடலானது, லிமிட்டெட் எடிஷன் மாடலாக அளவான எண்ணிக்கையில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா மோட்டார்ஸ் வழங்கும் 'ஹர் வீக் தீவாளி' சலுகைகள் அறிமுகம்

செப்டம்பரில் கார் மற்றும் டூ வீலர்கள் மீது அட்டகாசமான சலுகைகள்

செப்டம்பரில் செவர்லே கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள்

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun India is also gearing up for the festive season, by providing assured benefits to their customers. All three products - Redi-GO, GO+ and GO hatchback sold in India will be offered with assured gifts including a Gold Coin ahead of the festive season. Special offers and benefits are provided on bookings prior to September 30, 2016. To know more, check here...
Story first published: Sunday, September 25, 2016, 7:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark