டட்சன் ரெடி கோ காரை பரிசீலிக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

By Saravana

இந்திய கார் மார்க்கெட்டில் எண்ணிக்கையில் அதிக விற்பனையை கொண்ட பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் நாளை புத்தம் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று நிசான் நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையி்ல், நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் குறித்த சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டால், முன்பதிவு செய்ய ஏதுவாகும்.

தோற்றம்

தோற்றம்

அர்பன் கிராஸ் என்ற புதிய வகையில் இந்த காரை அறிமுகம் செய்ய இருக்கிறது டட்சன் பிராண்டின் தாய் நிறுவனமான நிசான். ரெனோ க்விட் உருவான அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டாலும், தோற்றத்தில் முற்றிலும் மாறுபடுகிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டிருப்பது முக்கிய அம்சம்.

வடிவம்

வடிவம்

டட்சன் ரெடிகோ கார் 3,429மிமீ நீளமும், 1,560மிமீ அகலமும், 1,541மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,348மிமீ வீல் பேஸ் கொண்டது. ரெனோ க்விட் காரைவிட நீளத்தில் குறைந்தாலும், உயரத்தில் விஞ்சுகிறது. இந்த கார் 185மிமீ கிரவுண்ட் கிளியரனஸ் எனப்படும் தரை இடைவெளி கொண்டிருப்பதால், பிற ஹேட்ச்பேக் கார்களை போல வேகத்தடைகளை கண்டு அஞ்ச வேண்டியிருக்காது.

இடவசதி

இடவசதி

டால் பாய் டிசைன் தாத்பரியங்களை கொண்ட இந்த காரில் ஹெட்ரூம் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 4 பேர் வசதியாக அமர்ந்து பயணிப்பதற்கு சிறப்பான இடவசதி கொண்ட காராக இருக்கும். பொருட்கள் வைப்பதற்கு 222 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 800சிசி பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

செயல்திறன் மற்றும் மைலேஜ்

செயல்திறன் மற்றும் மைலேஜ்

டட்சன் ரெடிகோ கார் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 15.98 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த செக்மென்ட்டிலேயே சிறப்பான மைலேஜ் தரும் மாடலாக இருக்கும்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

டட்சன் ரெடிகோ கார் D,A,T,T[O],S ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. மேலும், கூடுதல் அலங்காரங்கள் மற்றும் வசதிகளுக்காக, ஈஸி கிட்-ஸ்போர்ட், ஈஸி கிட் பிரிமியம், கூல் கிட், அர்பன் கிட் மற்றும் ஸ்டைல் கிட் என்ற கூடுதல் ஆக்சஸெரீகள் கொண்ட பேக்கேஜுகளையும் டட்சன் பிராண்டு வழங்க உள்ளது.

வசதிகள்

வசதிகள்

டட்சன் ரெடிகோ காரில் எல்இடி பகல் நேர விளக்குகள், முன்புற பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங், மியூசிக் சிஸ்டம், டிரைவர் பக்கத்திற்கான ஏர்பேக் உள்ளிட்டவை டாப் வேரியண்ட்டில் கிடைக்கும். அதேநேரத்தில், ரெனோ க்விட் காரைவிட வசதிகள் குறைவானது என்பதையும் மனதில் வைக்கவும்.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

டட்சன் ரெடிகோ கார் ரூ.2.40 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நாளை அதிகாரப்பூர்வ விலை விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.

சிட்டி கார்

சிட்டி கார்

குறைவான பட்ஜெட்டில், நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்த மாடலாக இருக்கும். ரெனோ க்விட் காருக்கான காத்திருப்பு காலமும், மாருதி ஆல்ட்டோ 800 காரை பார்த்து சலித்துப் போனவர்களுக்கும் மாற்றான சிறந்த மாடலாக வருகை தருகிறது டட்சன் ரெடி கோ கார்.

Most Read Articles
English summary
Datsun redi-Go: Eight things to know.
Story first published: Monday, June 6, 2016, 10:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X