டட்சன் ரெடி கோ காம்பேக்ட் ஹேட்ச்பேக், இந்தியாவில் ஏப்ரலில் அறிமுகம்

Written By:

டட்சன் ரெடி கோ அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

டட்சன் ரெடி கோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டட்சன் ரெடி கோ...

டட்சன் ரெடி கோ...

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் மாடல், முன்னதாக கான்செப்ட் வடிவில் 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது. தயாரிப்பு நிலையில் இருக்கும் டட்சன் ரெடி கோ 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும் என எதிர்பார்க்கபட்டது.

இது, மிகவும் எதிர்பார்க்கபட்ட மாடல்களில் ஒன்றாக உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகிறது.

உற்பத்தி அதிகரிப்பு;

உற்பத்தி அதிகரிப்பு;

முன்னதாக, ரெனோ - நிஸான் கூட்டணியில் சென்னையில் இயங்கி வரும் கார் உற்பத்தி ஆலையில் உற்பத்தியை கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த திட்டம், இந்திய சந்தைகளில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டட்சனின் மூன்றாவது மாடலின் உற்பத்திக்காக தான் என அறிவிக்கபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், டட்சன் நிறுவனம், கோ மற்றும் கோ+ ஆகிய 2 மாடல்களை மட்டுமே இந்தியாவில் வழங்கி வருகின்றனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 3 சிலிண்டர்கள் கொண்ட 0.8 லிட்டர் (800சிசி), பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 53 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 72 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ரெனோ க்விட் காரில் உபயோகிக்கபடும் அதே இஞ்ஜின் தான், இந்த டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிலும் உபயோகிக்கபடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

இது வரை, டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் உட்புற அமைப்பு குறித்த எந்த விதமான தகவல்களும் டட்சன் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.

கோ மற்றும் கோ+ மாடல்கள் உள்ளது போன்றே உட்புற அமைப்பு தான் இந்த ரெடி கோ மாடலிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ரெடி கோவின் விலைகள், குறிப்பிட்ட அளவிலான தொகையில் நிர்ணயிக்க திட்டமிடபட்டு வருகிறது. இதனால், ரூம் கேபின் அளவு விஸ்தாரமாக இருக்கும் வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கும்.

போட்டி;

போட்டி;

போட்டி பொருத்த வரை, டட்சன் நிறுவனத்தின் ரெடி கோ, இந்திய வாகன சந்தையில் ஏராளமான மாடல்கள் போட்டிக்கு உள்ளது.

மாருதி சுஸுகி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான், டாடா நானோ மற்றும் ரெனோ க்விட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் முக்கிய அனுகூலமே அதன் விலையாக தான் இருக்கும்.

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் பேஸ் வேரியண்ட், 2,00,000 ரூபாய் முதல் 2,50,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யபடலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விரைவில் வருகிறது டட்சன் ரெடிகோ பட்ஜெட் கார்... ரெனோ க்விட் சாம்ராஜ்யத்தை உடைக்குமா?

டட்சன் ரெடி-கோ காரின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள்!

டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Datsun Redi-Go could be launched in India by 2016 April. Datsun Redi-Go would share its engine with Renault Kwid. Redi-Go will have a 0.8-litre (800cc), three-cylinder, petrol engine. This compact hatchback might not have roomy cabin. The base variant of Datsun Redi-Go would cost between Rs. 2 lakh to Rs. 2.5 lakh ex-showroom. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark