டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிற்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

By Ravichandran

டட்சன் நிறுவனம், தங்களின் டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிற்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளனர். சமீபத்தில் தான், ரெனோ நிறுவனம், தங்களின் க்விட் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்தனர். அதற்குள், டட்சன் நிறுவனமும், தாங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெடி கோ ஹேட்ச்பேக்கை ரீகால் செய்துள்ளனர்.

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் ரீகால் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

காரணம்;

காரணம்;

ஜப்பானை சேர்ந்த டட்சன் நிறுவனம், தங்களின் 932 ரெடி கோ ஹேட்ச்பேக்குகளை ரீகால் செய்துள்ளனர். ப்யூவல் ஹோஸ் சிஸ்டத்தில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக இந்த ரீகால் அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது. மே 18, 2016 வரை தயாரிக்கப்பட்ட கார்கள் தான் இந்த முறை ரீகால் செய்யப்படுகிறது.

தீர்வு;

தீர்வு;

இது தொடர்பாக, டட்சன் நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் முதல் முறையான அறிவிப்பு வழங்கி வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் வாகனங்களில் உள்ள ஃப்யூவல் ஹோஸின் ஆய்வு மேற்கொண்டு அதற்கு ஒரு கிளிப்பை பொருத்துகின்றனர். இந்த பணி, இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

விபத்து;

விபத்து;

சமீபத்தில் தான், புதிய டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், தீப்பிடித்து எரியும் படங்கள் வெளியாகியது. மும்பையில் ஏற்பட்ட இந்த விபத்திற்கு காரணம், மேற்குறிப்பிட்ட பழுதான ப்யூவல் ஹோஸ் சிஸ்டத்தில் ஏற்ப்பட்ட கோளாறும் காரணமாக இருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், முதல் முறையாக உலகிற்கு ஏப்ரலில் காண்பிக்கப்பட்டது. இதன் முறையான அறிமுகம், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிற்கு, 3-சிலிண்டர்கள் உடைய 799 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 53 பிஹெச்பியையும், அதிகப்படியாக 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான், முன் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், ஒரு லிட்டருக்கு 25.17 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், அதிக்கப்படியாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

செயல்திறன்;

செயல்திறன்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 15.9 நொடிகளில் எட்டிவிடும்.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, டட்சன் நிறுவனம், இந்த ரெடி கோ ஹேட்ச்பேக்கின் எஸ் என்ற டாப் வேரியன்ட்டில், டிரைவருக்கான ஏர்பேக் வழங்குகிறது.

விலை;

விலை;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 2.38 லட்சம் ரூபாய் என்ற துவக்க விலையில் இருந்து விற்கப்படுகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

அடுத்த கட்டத்திற்கு செல்லும் நாசா... மின்சார விமானத்தை தயாரிக்கிறது!

கார் விபத்தில் சிக்கினால் தற்காத்துக் கொள்வதற்கான உயிர் காக்கும் கருவி!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun announced Recall for their Redi-GO Hatchback. Datsun has announced recall for 932 units of redi-GO in India over faulty fuel system. These affected models were manufactured till May 18, 2016. Datsun will notify customers from this month onward to inspect fuel hose and fix a clip. This work will be carried out for free and customers will not be charged for replacement. To know more, check here...
Story first published: Thursday, October 13, 2016, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X