லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் அறிமுகம் செய்தார் சாக்ஷி மல்லிக்

Written By:

டட்சன் நிறுவனம், தங்களின் லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்தனர். ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் இணை நிறுவனமான டட்சன் நிறுவனம் தான் இந்த லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலை தயாரிக்கிறது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மல்லிக் தான், இதை அறிமுகம் செய்து வைத்தார்.

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

பிராண்ட் அம்பாஸிடர்...

பிராண்ட் அம்பாஸிடர்...

சாக்ஷி மல்லிக், ஹரியானாவின் ரோதக் மாவடத்தில் உள்ள மோக்ரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில், ப்ரீ ஸ்டைல் ரெஸ்ட்லிங்கில் வெண்கல பதக்கம் வென்று புகழ் பெற்றார். சாக்ஷி மல்லிக் தான், லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் ஹேட்ச்பேக்கின் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டார்.

முதல் மாடல்;

முதல் மாடல்;

டட்சன் நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலை, சாக்ஷி மல்லிக் தான் அறிமுகம் செய்து வைத்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மல்லிக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலின் முதல் தயாரிப்பு நிலை கார் வழங்கப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலில் 3 சிலிண்டர்கள் உடைய அதே 799 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 53 பிஹெச்பியையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முன் சக்கரங்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

டட்சன் நிறுவனம், லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதில், ரெட் தீம் ஆக்சென்ட்கள் உடைய பிளாக் கிரில், காரின் மத்தியில் செல்லும் பெரிய பிளாக் ஸ்டிரைப், பிளாக் வீல் கவர் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்ட் பிளாக் நிறத்தினால் செய்யப்பட்டுள்ளது. இந்த டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலில் புளூடூத் ஆடியோ, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கீலஸ் என்ட்ரி உள்ளிட்ட பல வசதிகள் சேர்க்கபட்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடல், ரூபி, வைட் மற்றும் கிரே ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது.

கிடைக்கும் வேரியன்ட்;

கிடைக்கும் வேரியன்ட்;

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட், டாப்-என்ட் எஸ் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

புக்கிங்;

புக்கிங்;

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடலை, இந்தியா முழுவதும் உள்ள 227 டட்சன் டீலர்ஷிப்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம்.

விலை;

விலை;

லிமிட்டெட் எடிஷன் டட்சன் ரெடி கோ ஸ்போர்ட் மாடல், 3,49,479 என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் கிடைக்கிறது.

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun has launched the limited edition Redi-Go Sport in India. Redi-Go Sport was launched by 2016 Rio Olympics Bronze Medalist Sakhsi Malik who would be Brand Ambassador for this new car. Datsun honoured Sakhsi Malik for her Olympic heroics by presenting her with keys of first production redi-Go Sport. It is available in three colour options: Ruby, White and Grey. To know more, check here...
Story first published: Thursday, September 29, 2016, 18:07 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos