டட்சன் ரெடி கோ, ஏப்ரல் 14-ல் இந்தியாவில் அறிமுகம் - படம் வெளியிட்டு டீஸ் செய்யபட்டது

Written By:

டட்சன் நிறுவனம், இந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள தங்களின் காம்பேக்ட் ஹேட்ச்பேக் காரான ரெடி கோ படத்தை வெளியிட்டு டீஸ் செய்துள்ளது.

விரைவில் வெளியாக உள்ள டட்சன் ரெடி கோ காம்பேக்ட் ஹேட்ச்பேக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டட்சன் ரெடி கோ...

டட்சன் ரெடி கோ...

டட்சன் நிறுவனத்தின் ரெடி கோ ஹேட்ச்பேக், முன்னதாக கான்செப்ட் வடிவில் 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

தயாரிப்பு நிலையில் இருந்த டட்சன் ரெடி கோ, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும் என எதிர்பார்க்கபட்டது.

தற்போது, அறிமுகத்திற்கு தயாராக உள்ள இதன் படம் வெளியிடபட்டு, டீஸ் செய்யபட்டுள்ளது.

கட்டமைப்பு;

கட்டமைப்பு;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், ரெனோ-நிஸான் அல்லையன்ஸ்-ஸின் (கூட்டணி) சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மை, அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இதே சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு தான், ரெனோ க்விட் காரும் வடிவமைக்கபட்டுள்ளது. ரெனோ க்விட் கார், இந்திய் சந்தையில் மிக பிரபலமான காராக மாறிவிட்டது.

டட்சன் ரெடி கோ என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 0.8 (800 சிசி), 3-சிலிண்டர்கள் உடைய பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 53.26 பிஹெச்பியையும், அதிக்கபடியாக 72

என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

டீசல் மாடல்?

டீசல் மாடல்?

டட்சன் நிறுவனம், இந்த ரெடி கோ ஹேட்ச்பேக்கின் டீசல் இஞ்ஜின் கொண்ட மாடலும் வரும் காலங்களில் அறிமுகம் செய்யபடும்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, இந்த டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் பெரும்பாலும் கான்செப்ட் நிலையில் இருந்த அம்சங்களையே கொண்டுள்ளது. வெளிப்புற அமைப்புகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இதனால், டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் பிரத்யேகமான டிசைன் கொண்டதாக இருக்கும்.

இண்டீரியர்;

இண்டீரியர்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் உட்புற அமைப்புகள் எப்படி இருக்கும் என்பது, இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதற்கு காரணம், இதன் இண்டீரியர் குறித்து, இது வரை எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

எனினும், இது பிற டட்சன் தயாரிப்புகள் போன்றே இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

பிற தயாரிப்புகள்;

பிற தயாரிப்புகள்;

தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தைகளில், டட்சன் நிறுவனம் 3 தயாரிப்புகள் விற்பனைக்கு கொண்டிருக்கும். இந்த ரெடி கோ ஹேட்ச்பேக் தான் மிகவும் மிதமான விலை கொண்ட மாடலாக இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், ஏப்ரல் 14-ஆம் தேதி அறிமுகம் செய்யபடும் என அறிவிக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டட்சன் ரெடி கோ காம்பேக்ட் ஹேட்ச்பேக், இந்தியாவில் ஏப்ரலில் அறிமுகம்

விரைவில் வருகிறது டட்சன் ரெடிகோ பட்ஜெட் கார்... ரெனோ க்விட் சாம்ராஜ்யத்தை உடைக்குமா?

டட்சன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Datsun has teased us all with an image of their upcoming model in Indian market. This image shared is that of their Redi-Go compact hatchback model, which is to be launched on April 14, 2016. Redi-Go is based on Renault-Nissan Alliance's CMF-A platform. This will be Datsun's most affordable product in their portfolio. To know more, check here...
Story first published: Sunday, April 3, 2016, 7:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark