டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் - முழு தகவல்கள்

By Ravichandran

டட்சன் நிறுவனம் வழங்கும் டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகம் புது டெல்லியில் நடைபெற்றது.

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர் அம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டட்சன் ரெடி-கோ...

டட்சன் ரெடி-கோ...

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், சிறிய அளவிலான மாடல்களில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

டட்சன் ரெடி-கோ நன்கு செதுக்கபட்டது போன்ற தோற்றம் கொண்ட மிக ஸ்டைலான, அர்பன் கிராஸ் மாடல் ஆகும்.

மேலும், இந்திய வாகன சந்தைகளில், மிதமான விலையில் விற்கபடும் கார்களில், டட்சன் ரெடி-கோவும் ஒன்றாக உள்ளதால், இது மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.

இண்டீரியர் - சிறப்பு அம்சங்கள்;

இண்டீரியர் - சிறப்பு அம்சங்கள்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உட்புற அமைப்புகள் அனைத்தும் எளிமையாகவும், சுலபமாக உபயோகிக்கும் வகையிலும் உள்ளது.

டட்சன் ரெடி-கோ, சிறிய மாடல் கார் டிசைனுக்கான அனைத்து சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது.

12 வோல்ட் சார்ஜிங் போர்ட் அருகே உங்கள் மொபைல்போனை வைத்து கொள்ள தோதுவாக உள்ள புதுமையான இட வசதி வரவேற்கதக்க விஷயம் ஆகும்.

ஸ்டியரிங் வீல்;

ஸ்டியரிங் வீல்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் ஸ்டியரிங் வீல் தம்ப் காண்டோர்ஸ் (கட்டைவிரல் வைத்து கொள்ள அமைக்கபட்ட அமைப்பு) வசதியுடன் வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த தம்ப் காண்டோர்ஸ், இந்தியாவில் உள்ள தற்கால தலைமுறை கார்களில் முக்கியமான அம்சமாக உள்ளது.

இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்;

இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் சிங்கிள் டயல் அமைப்பில் உள்ளது. இது ஸ்பீடோமீட்டர் மற்றும் டிஜிட்டல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் கொண்டுள்ளது.

இது ஃப்யூவல் கேஜ், ஓடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டர் ஆகியவற்றை வெளிபடுத்துகிறது.

ஆடியோ சிஸ்டம்;

ஆடியோ சிஸ்டம்;

டட்சன் ரெடி-கோ மாடலில் உள்ள ஆடியோ சிஸ்டம், சிடி, ஆக்ஸ்-இன், யூஎஸ்பி மற்றும் ரேடியோ உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது.

ஏசி;

ஏசி;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் ஏசி வெண்ட்கள் டிரைவர் பக்கத்தில் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் உள்ளது. கோ-டிரைவர் (டிரைவர் அருகில் அமர்ந்திருப்பவர்) நான்-அட்ஜெஸ்டிபிள் (அட்ஜஸ்ட் செய்ய முடியாத) ஏசி வெண்ட் மட்டுமே வழங்கபட்டுள்ளது.

இருப்பினும், பயணியரின் வலது புறத்தில் அட்ஜஸ்ட் செய்யகூடிய வகையிலான ஏசி வெண்ட்கள் உள்ளது.

ஏசி வெண்ட்களுக்கான கண்ட்ரோல்கள் உபயோகிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளன.

கியர் ஸ்டிக் கண்ட்ரோல்;

கியர் ஸ்டிக் கண்ட்ரோல்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் கியர் ஸ்டிக் கன்சோல் பகுதியில் 2 கப் ஹோல்டர்கள் (கப் வைக்க கூடிய இடம்) உள்ளன. இங்கு தான், 2 முன் கதவுகளுக்கான பவர் விண்டோஸ் கண்ட்ரோல்கள் உள்ளன.

மேலும், டிரைவருக்கு அருகில், மொபைல்ஃபோன் வைத்துகொள்ளகூடிய வகையிலான இன்னொரு சிறிய இட வசதி வழங்கபட்டுள்ளது.

கிளௌவ் பாக்ஸ்;

கிளௌவ் பாக்ஸ்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கில் உள்ள கிளௌவ் பாக்ஸ் சிறியதாக உள்ளது. இதற்கு காரணம், இதன் மேல் திறந்த நிலையில் உள்ள பொருள் தேக்கி கொள்ளும் இடம் ஆக உள்ளது.

கிளௌவ் பாக்ஸ் பகுதியில், ரெஜிஸ்டிரேஷன் சர்டிஃபிகேட், இன்சூரன்ஸ் பேப்பர், எமிஷன் டெஸ்ட் பேப்பர்கள் மற்றும் ஓனர் மேனுவல் (கார் சொந்தகாரரின் தாள்கள்) உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்து கொள்ளலாம்.

ஹெட்ரெஸ்ட்;

ஹெட்ரெஸ்ட்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் அகற்ற கூடிய வகையிலான ஹெட்ரெஸ்ட்களுடன் வருவதில்லை. இது டட்சன் நிறுவனம், செலவுகளை குறைக்கும் நோக்கில் எடுக்கபட்ட நடவடிக்கை ஆக தெரிகிறது.

இப்படிபட்ட அமைப்பினால், டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் மிதமாக இருக்கும் என நம்பலாம்.

கேபின் இட வசதி;

கேபின் இட வசதி;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் கேபின் இட வசதி அதிகமாக உள்ளது. டட்சன் ரெடி-கோவின் கேபின் இட வசதி, மாருதி சுஸுகி ஆல்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் ஆகிய மாடல்களில் உள்ளதற்கு சமமான கேபின் இட வசதி உள்ளது.

எக்ஸ்டீரியர் - கிரவுண்ட் கிளியரன்ஸ்;

எக்ஸ்டீரியர் - கிரவுண்ட் கிளியரன்ஸ்;

டட்சன் நிறுவனம், தாங்கள் வழங்கும் இந்த ரெடி-கோ காரை அர்பன் கிராஸ் மாடல் என வெளிபடுத்தி கொள்கின்றனர்.

இது, 185 மில்லிமீட்டர் என்ற அளவிலான மிக உயரிய கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. இதனால், குண்டும் குழியுமாக சாலைகள் இருந்தாலும், இந்த டட்சன் ரெடி-கோ காரை கவலைபடாமல் இயக்கி செல்லலாம்.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் முன் பக்க தோற்றம் பெரிய ஹனிகோம்ப் ஏர் டேம்கள் (தேன் கூடு போன்ற டிசைன்) கொண்டுள்ளது. இது டட்சன் கார்களுக்கே உரிய தனித்தன்மையாகும்.

மற்றபடி, டட்சன் ரெடி-கோ மாடலின் டிசைன் தேவைப்படும் இடங்களில் கூர்மையான மற்றும் ஆங்குலார் தோற்றத்தில் உள்ளது. இவற்றை பார்க்கும் போது இதன் டிசைன் சிறிய கார் டிசைன் மொழிக்கு ஏற்றவாறு குறைக்கபட்டதாக கூற முடியாது.

பக்கவாட்டு தோற்றம்;

பக்கவாட்டு தோற்றம்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் பக்கவாட்டில் உள்ள ஷோல்டர் லைன்கள் இதன் டெயில்லேம்ப்கள் வரை செல்கிறது. இது இதற்கு கட்டுமஸ்தான தோற்றத்தை வழங்குகிறது.

இதன் போட்டி மாடல்கள் பெட்டி போன்ற அமைப்பு கொண்டிருக்கும் நிலையில், டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் அப்படி இல்லாமல் இருப்பதனால் இதற்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இதன் முன் சக்கரத்தில் உள்ள வீல்-ஆர்ச்கள், ரெடி-கோ மாடலுக்கு கட்டு மஸ்தான தோற்றம் வழங்குகிறது. எனினும், இது பின் பக்கத்தில் சிறியதாக உள்ளது.

பின்பக்க தோற்றம்;

பின்பக்க தோற்றம்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் பின் பக்கத்தில் உள்ள டெயில்லேம்ப்கள் செங்குத்தாக நோக்கியவாறு, சி-பிள்ளர் வரை நீண்டு இருக்கும். இதனால், டட்சன் ரெடி-கோ கார், வேகன் போல் காட்சி அளிக்கிறது.

காரின் குறுக்கே ஒரு குரோம் ஸ்ட்ரிப் டெயில்கேட் வரை செல்கிறது. இது இந்த காருக்கு சிறந்த ஜொலிப்பை வழங்குகிறது.

ரியர் பம்பர்;

ரியர் பம்பர்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் ரியர் பம்பரின் கீழே ஒரு பிளாக் கிளாடிங் வழங்கபட்டுள்ளது. இது, இந்த காருக்கு ஸ்போர்டியான தோற்றம் வழங்குகிறது.

பூட் ஸ்பேஸ்;

பூட் ஸ்பேஸ்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் குறிப்படக்கூடிய வகையில் உள்ளது. இதில் 4 சிரிய லக்கேஜ்களை கொண்டு செல்லலாம்.

வீல் கேப்;

வீல் கேப்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின், வீல் கேப்கள் 6-ஸ்போக்குகள் கொண்டதாகவும், சில்வர் நிறத்திலும் உள்ளது.

இது பார்ப்போரின் கண்களை ஈர்க்கும் வகையில் கூர்மையாக உள்ளது.

விவரகுறிப்புகள் - ஓர் அலசல் : இஞ்ஜின்;

விவரகுறிப்புகள் - ஓர் அலசல் : இஞ்ஜின்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், 800 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் இஞ்ஜின், 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

டட்சன் ரெடி-கோ பெர்ஃபார்மன்ஸ் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அறிமுகம்;

அறிமுகம்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், இந்த ஆண்டின் மே அல்லது ஜூன் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபடலாம்.

புக்கிங்;

புக்கிங்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காருக்கான புக்கிங், மே 1-ஆம் தேதி முதல் ஏற்று கொள்ளபடும் என டட்சன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

டெலிவரி;

டெலிவரி;

டட்சன் ரெடி-கோ காரின் டெலிவரி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து துவங்கும்.

போட்டி;

போட்டி;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், ரெனோ க்விட், மாருதி சுஸுகி ஆல்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகம் டெல்லியில் நடைபெற்றது

டட்சன் ரெடி கோ காம்பேக்ட் ஹேட்ச்பேக், இந்தியாவில் ஏப்ரலில் அறிமுகம்

டட்சன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Datsun made Global debut of Datsun Redi-Go Hatchback in New Delhi, India. Redi-Go is one of the most expected Cars in Small Cars. Redi-Go has many interesting features. RediGO will be launched by May-June of 2016. Bookings will start from May 1, 2016. Deliveries start from 1st week of June. To know more about Interiors and Exteriors, check here...
Story first published: Tuesday, April 19, 2016, 20:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X