கார் ஃப்ரீ டே நிகழ்ச்சியின் 6-ஆம் பதிப்பு, மார்ச் 22-ல் டெல்லியில் அனுசரிப்பு

By Ravichandran

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு தான், டெல்லியை ஆளுகிறது. ஒவ்வொரு மாதமும், 22-ஆம் தேதி டெல்லியில் 'கார் ஃப்ரீ டே' (கார்கள் இல்லாத தினம்) என்ற ஒரு தினத்தை அனுசரிக்கின்றனர்.

இது 6-வது பதிப்பாகும். இந்த மாதத்திறகான 'கார் ஃப்ரீ டே' - 22-ஆம் தேதி (நாளை) அனுசரிக்கபடுகிறது. டெல்லி அரசு இதற்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த உள்ளது. இந்த முறை, இந்த அணிவகுப்பில் நிகழ்ச்சியில் சிறிய மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இந்த முறை பொதுமக்களுக்கு மத்தியிளும் இந்த விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தபடுகிறது.

'கார் ஃப்ரீ டே' நிகழ்ச்சியின் 6-வது பதிப்பு, வட-கிழக்கு டெல்லியில் உள்ள ஷாஹ்தரா பகுதியில் நடைபெறுகிறது. இதில் சமூக ஆர்வலர்கள் மக்களிடம் பொது போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியதுவத்தை எடுத்து விளக்குவர். இந்த நடவடிக்கைகளின் நோக்கமே, பொது போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரித்து, டெல்லியில் கூடி கொண்டே வரும் காற்று மாசு அடைதலை குறைக்க வேண்டும் என்பதாக தான் உள்ளது.

delhi-car-free-day-march-22-sixth-edition-to-be-observed

கார் ஃப்ரீ டே, டெல்லியில் மார்ச் 22-ஆம் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த நாளில் மக்கள், தங்களின் தனிபட்ட வாகனங்களை உபயோகிக்க வேண்டாம் என கேட்டுகொள்ளபடுகின்றனர். இதனால், 2 நன்மைகள் நடைபெறுகிறது. முதலாவதாக, போக்குவரத்து நெரிசல் குறைகிறது. இரண்டாவதாக, காற்று மாசு அடைவது குறிப்பிடப்படும் அளவிற்கு குறைகிறது.

Most Read Articles
English summary
22nd of every month was decided to be organised as 'Car Free Day' in Delhi. As part of 6th Edition, Now, 'Car Free Day' is celebrated on 22nd March. Government plans to organise an environment Awareness March for this. Car Free Day in Delhi is organised in Shahdara area, North-East Delhi. In this event, Activists will suggest people to make use of public transport.
Story first published: Monday, March 21, 2016, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X