மின்சார டிரக்குகள், எஸ்யூவிகளை களமிறக்கும் டெஸ்லா: எலான் மஸ்கின் மாஸ்டர் பிளான்!

By Meena

அமெரிக்காவின் டெஸ்லா கார் நிறுவனம் பல்வேறு புதுமைகளையும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான சிறப்பம்சங்களையும் வழங்குவதில் கைதேர்ந்த நிறுவனம்.

இந்நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தொலைநோக்குத் திட்டத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டதாக பெருமையாகக் கூறிய மஸ்க், தற்போது இரண்டாம் கட்ட தொலைநோக்கு அறிக்கையை அறிமுகப்படு்த்தியுள்ளார்.

டெஸ்லா

மாஸ்டர் பிளான் - பார்ட் 2 எனப் பெயரிடப்பட்டு வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதனைப் பார்க்கும்போது பல்வேறு புதுமையான அம்சங்களை கார் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தக் காத்திருக்கிறது டெஸ்லா நிறுவனம் என்பது தெளிவாகிறது.

அதன்படி, டெஸ்லாவின் வெற்றிகரமான காரான மாடல் எக்ஸ் எஸ்யூவியில் சிறிய ரக காம்பேக்ட் வாகனத்தைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய டிரக்குகளை (லாரிகள்) தயாரிக்கவும் மாஸ்டர் பிளானில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பயணிகள் பஸ் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா தயாரிப்புகளில் வெளியாகும் வாகனங்களின் கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் (சோலார் பேனல்) பொருத்தப்படும் என்றும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். கார் இயங்கினாலும் சரி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் சரி, சோலார் பேனல்கள் செயல்படும் வகையில் அவை வடிவமைக்கப்பட உள்ளதாம்.

இதன் மூலம் பேட்டரிக்குத் தேவையான மின் சக்தியை காரில் பொருத்தப்பட்ட சூரிய ஒளி மின்தகடுகளில் இருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோல், மாடல் 3 காரை விடக் குறைவான விலையில் எந்த வாகனத்தையும் விற்பனை செய்வதற்கான திட்டம் புதிய பிளானில் இல்லை என்றும் எலன் மஸ்க் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதிக பாதுகாப்புடன் கூடிய தானியங்கி வாகனங்களைத் தயாரிக்கவும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேனுவலாக வாகனத்தை இயக்குவதைக் காட்டிலும் அதிக கவனத்துடன் செயல்படும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்படும் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கவும் இரண்டாம் கட்ட தொலை நோக்குத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஆட்டோ மொபைல் உலகை ஆட்டுவிக்கக் காத்திருக்கிறது டெஸ்லா நிறுவனம். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்....

Most Read Articles
English summary
Tesla founder and CEO Elon Musk has outlined his 'Master Plan: Part Deux' which will see the company expand into new spaces inside the automotive industry and beyond it as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X