சில்க் ரூட்டில் பயணிப்பதற்கான டூர் பேக்கேஜ்: எம்பார்க் அறிவிப்பு

By Meena

சாலையின் இரு பக்கமும் பசுமை போர்த்தியதொரு ரம்மியமான சூழலில், முள்ளும் மலரும் பட சரத்பாபு மாதிரி செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என பாடிக் கொண்டே வண்டியை ஓட்டிச் செல்ல யாருக்குத்தான் ஆசை இருக்காது?

அப்படி ஒரு கவித்துவமான டிரைவிங் கனவு ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும். மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது கிர்கிஸ்தான் என்றொரு நாடு. நீங்கள் கற்பனையில் சேமித்து வைத்திருக்கும் இயற்கைக் காட்சியின் பிம்பத்தை, தன்னகத்தே கொண்டுள்ள தேசம் அது.

சில்க் ரூட் டூர்

பழங்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள பட்டு வியாபாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம் மேற்கொள்ள செல்லும்போது இந்த சாலையைத்தான் பயன்படுத்துவார்களாம். சில்க் ரோடு எனப்படும் இந்த சாலைகளின் வழியே நீங்கள் பயணித்தீர்கள் என்றால் உங்களின் வாழ்நாள் விருப்பம் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டதாகவே உணருவீர்கள். கடவுளின் நேரடிப் பார்வையில் அணு அணுவாகச் செதுக்கப்பட்டதொரு இயற்கை அழகு, அந்நாட்டுச் சாலையில் இரு மருங்கிலும் பூத்துக் கிடக்கும்.

அப்பேர்பட்ட எழில் கொஞ்சும் அந்தச் சாலையில் பயணிப்பதற்கான சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது எம்பார்க் என்ற டிராவல் ஏற்பாட்டு நிறுவனம். பசுமை உலகில் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதானே...

பைக் டூர்

யமஹா எக்ஸ்டி 600 மோட்டார் பைக் அல்லது டொயோட்டா எஸ்யூவி கார் ஆகிய ஏதாவது ஒரு வாகனத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து பட்டு சாலையில் பட்டாம் பூச்சி போல பயணிக்கலாம்.

தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து செலவு, வண்டிக்கான எரிபொருள், விமான டிக்கெட், விசா வசதிகள், உள்ளூர் சிம் கார்டு உள்ளிட்டவற்றை எம்பார்க் நிறுவனம் வழங்கி விடும். இதைத் தவிர கார் மெக்கானிக் உதவி, போட்டோகிராப் வசதி, முதலுதவி பொருள்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளையும் அந்த சுற்றுலா நிறுவனம் செய்து கொடுக்கிறது.

ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து எனப்படும் கைர்கிஸ்தான் தேசத்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா? வரும் 23-ஆம் தேதியுடன் அதற்கான முன்பதிவு முடிகிறதாம். அதற்குள் புக் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது எம்பார்க் நிறுவனம்.

சில்க் ரூட்

அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்கள் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சில்க் ரூட்டில் சிறகடித்துச் செல்லலாம்.

சரி முக்கியான விஷயத்துக்கு வருவோம். அதாங்க... சுற்றுலாக் கட்டணம்...

பைக் சவாரிக்கு - ரூ.1,50,000 மற்றும் 300 டாலர்கள் திருப்பித் தரக்கூடிய டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். காருக்கு ரூ.1,40,000 மற்றும் 400 டாலர்கள் டெபாசிட் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து செலவுகளும் இதில் அடக்கமாம்.

சுற்றுலாக் கட்டணத்தைக் கேட்டவுடன் பின்வாங்க நினைப்பவர்கள், வாழ்க்கையில் நிச்சயம் இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்துடன் இப்போதே திட்டமிடுங்கள்... அடுத்த சில ஆண்டுகளில் உங்கள் கனவுகள் கைகூட டிரைவ் ஸ்பார்க்கின் வாழ்த்துக்கள்....

Most Read Articles
English summary
Embarq Organises Road Trip Through The Ancient Silk Route.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X