விரைவில் இந்தியாவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

By Meena

ஜப்பான் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா, இந்திய மார்க்கெட்டில் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்க அனைத்து வகையான அஸ்திரங்களையும் ஏவி வருகிறது.

தில்லியில் 2000 சிசி திறனுக்கு அதிகமான டீசல் எஞ்சின் வாகனங்களுக்குத் தடை போடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து 1400 சிசி திறனுடைய எஞ்சின்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது அந்நிறுவனம். இதைத் தவிர பல புதிய மாடல்களையும், தொழில்நுட்பங்களையும் களமிறக்குவதாகவும் தெரிவித்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்த நிலையில், டொயோட்டா நிறுவனத்தின் வெற்றிகரமான எஸ்யூவி மாடலான ஃபார்ச்சூனரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது.

ஃபார்ச்சூனருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அதிலேயே பெட்ரோல் மாடல் காரை அறிமுகப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தில் வடிவமைத்தால், அதற்கும் வாடிக்கையாளர் வரவேற்பு அளிப்பார்கள் என நம்புகிறது டொயோட்டா நிறுவனம்.

அதன் யூகம் ஓரளவு சரிதான். அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் காருக்கு ஆட்டோ மொபைல் உலகில் எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்தத் தருணத்தில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது டொயோட்டா நிறுவனம்.

அதாவது, புதிய ஃபார்ச்சூனர் மாடல் கார் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப்போகிறது என்ற விஷயத்தை உறுதிபடுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த மாடலின் உற்பத்தி தொடங்கும் என்றும், டிசம்பருக்குள் மார்க்கெட்டில் மேம்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் கார் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 2.7 லிட்டர் திறனுள்ள 4 சிலிண்டர் விவிடி - ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 162 பிஎச்பி பவரையும் மற்றும் 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 5 மேனுவல் கியர்கள் மற்றும் 6 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் இந்த மாடலில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

அதே போல் மேம்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் காரில், டீசல் எஞ்சினிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2.4 லிட்டர் ஜிடி எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் எஞ்சின்கள் அதில் பொருத்தப்படலாம் எனத் தெரிகிறது.

புதிய மாடலில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்டவை வெளியான பிறகே, அதன் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயருகிறதா? இல்லையா? என்பதை அறிய முடியும். காத்திருப்போம் அதுவரை...

Most Read Articles
English summary
Exclusive: Toyota Fortuner Petrol Model To Launch End Of 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X