ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

மிகவும் எதிர்பார்க்கபட்ட புதிய ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபெராரி 488 ஜிடிபி பற்றி...

ஃபெராரி 488 ஜிடிபி பற்றி...

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், புதிய டிசைன், டர்போ இஞ்ஜின், புரட்சிகரமான ஏரோடைனமிக்ஸ் மற்றும் பல்வேறு வகையான காப்புறிமை பெறப்பட்ட சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னர், ஃபெராரி நிறுவனம், முதன் முதலாக மிட்-ரியர்-இஞ்ஜின் கொண்ட வி8 பெர்லினெட்டா-வான 308 மாடலை வெளியிட்டது.

தற்போது வெளியிடபட்டுள்ள ஃபெராரி 488 ஜிடிபி, கார்களின் வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளது.

இதன் வடிவமைப்பு மூலம், உலக அளவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான புதிய அளவுகோல்களே உருவாக்கபட்டுள்ளது என்று கூறலாம்.

அறிமுக விழா பற்றி...

அறிமுக விழா பற்றி...

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் அறிமுக விழா, புது டெல்லியில் உள்ள, புதிய ஃபெராரி டீலர்ஷிப்-பான செலக்ட் கார்ஸ் விற்பனை மையத்தில் நடைபெற்றது.

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் அறிமுக விழாவில், ஃபெராரி நிறுவனத்தின் உயர் அதிகாரி, ஆர்லியன் சௌவார்ட் ம் மற்றும் செலக்ட் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டைரக்டர் யாதூர் கபூர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜிடிபி - பெயர் காரணம்;

ஜிடிபி - பெயர் காரணம்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார் மாடலின் பெயருக்கு சில காரணங்களும் உண்டு.

ஃபெராரி 488 ஜிடிபி என்ற பெயரில், ஜிடிபி கிரான் ட்யூரிஸ்மோ பெர்லினெட்டா என்பதை குறிக்கிறது. இத்தகைய நாமகரணம், ஃபெராரியின் நீண்ட கால சரித்திரத்தை குறிக்கும் வகையில் உள்ளது.

யாதூர் கபூர் கருத்து;

யாதூர் கபூர் கருத்து;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் அறிமுக விழாவில் பேசிய செலக்ட் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டைரக்டர் யாதூர் கபூர், மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

ஃபெராரி நிறுவனத்தின் சூப்பர்கார்களுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் வட இந்தியா முழுவதும் பரவலாக உள்ளனர். இந்த மாடலின் அறிமுகம், ஃபெராரி தயாரிப்புகளை விரும்புபவர்களுக்கு இனிமையான செய்தியாக இருக்கும் என யாதூர் கபூர் தெரிவித்தார்.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், ஃபெராரி ஸ்டைலிங் செண்டர் செய்யபட்டுள்ளது.

செதுக்கபட்டது போன்ற இதன் டிசைன், ஸ்போர்ட்டியான தன்மையை அதிகரிக்கிறது. அப்படி இருந்தும், ஃபெராரியின் புகழ்வாய்ந்த டிசைன் கலாச்சாரங்கள் பாதுகாக்கபட்டுள்ளது.

இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் வகை - வி8 - 90° டர்போ இஞ்ஜின்

ஒட்டுமொத்த டிஸ்பிளேஸ்மண்ட் - 3902 cm3

அதிகப்படியான பவர் - 8,000 ஆர்பிஎம்களில், 492 கிலோவாட் (670 சிவி)

உச்சபட்ச டார்க் - 7-வது கியரில், 3,000 ஆர்பிஎம்களில், 760 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் இஞ்ஜின், வேரியபிள் பூஸ்ட் மேனேஜ்மெண்ட் வசதி கொண்ட எஃப்1 ட்யூவல்-கிளட்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டைமென்ஷன் (பரிமாணங்கள்);

டைமென்ஷன் (பரிமாணங்கள்);

நீளம் - 4568 மில்லிமீட்டர்

அகலம் - 1952 மில்லிமீட்டர்

உயரம் - 1213 மில்லிமீட்டர்

எடை;

எடை;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், எடை (ட்ரை வெய்ட்) 1370 கிலோகிராம்களாக உள்ளது.

எடை விநியோகம்;

எடை விநியோகம்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், ஃப்ரண்ட்-டில் 46.5%, ரியரில் 53.5% என்ற அளவில் எடை விநியோகம் செய்யபட்டுள்ளது.

திறன்;

திறன்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.0 நொடிகளில் எட்டிவிடுகிறது.

அதேபோல், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், உச்சபட்சமாக மணிக்கு 330 கிலோமீட்டருக்கும் கூடுதலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், 100 கிலோமிட்டருக்கு 11.4 லிட்டர் எரிபொருள் செலவிடுகிறது.

கார்பன் டை ஆக்சைடு வெளியீடு;

கார்பன் டை ஆக்சைடு வெளியீடு;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 260 கிராம் கார்பன் டை ஆக்சைடு (கரியமில வாயு) வெளியிடுகிறது.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், உற்சாகமிக்க பெர்ஃபார்மென்ஸிற்கு உத்திரவாதம் வழங்குகிறது. இதனால், எந்த விதமான டிரைவிங் சூழ்நிலைகளிலும் அதிகப்படியான திறன் வெளிப்பாடிற்கு உத்திரவாதம் உள்ளது.

கண்ட்ரோல்;

கண்ட்ரோல்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் டைனமிக் வெஹிகிள் கண்ட்ரோல்கள் பெரும் அளவிற்கு மேம்பட்டுள்ளது. ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், எஸ்எஸ்சி2 அல்லது சைட் ஸ்லிப் கண்ட்ரோல் சிஸ்டம் என அழைக்கபடும் புதிய வசதியை கொண்டுள்ளது.

இந்த எஸ்எஸ்சி2, எஃப்1-ட்ராக் மற்றும் ஈ-டிஃப் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதோடு, ஆக்டிவ் டேம்பர்களையும் கட்டுபடுத்துகிறது. இதனால், நிபுனத்துவம் இல்லாத டிரைவர்கள் கூட இந்த ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் உச்சபட்ச திறனை பயமில்லாமல் இயக்கி முழு இன்பத்தை உணர முடியும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லாஃபெராரி காரின் மீது உரிமையாளரின் புல்லரிக்க வைக்கும் பாசம்!

ஃபெராரியின் டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம்

ஃபெராரி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Ferrari has launched the Ferrari 488 GTB SuperCar in Indian in an event held in New Delhi. Ferrari 488 GTB SuperCar sports new design, turbo engine, revolutionary aerodynamics and plethora of lots of patented solutions. Ferrari 488 GTB has set a new benchmark for the sports cars around the world. Ferrari Styling Centre was designed at Ferrari Styling Centre.
Story first published: Wednesday, February 17, 2016, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X