ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார் மும்பையில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

மிகவும் எதிர்பார்க்கபட்ட கார்களில் ஒன்றான ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், மும்பையில் அறிமுகம் செய்யபட்டது.

ஃபெராரி 488 ஜிடிபி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

ஃபெராரி 488 ஜிடிபி அறிமுகம்;

ஃபெராரி 488 ஜிடிபி அறிமுகம்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், சில தினங்களுக்கு முன்னதாக டெல்லி நடந்த விழாவில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

இதையடுத்து, தற்போது மும்பையிலும் பிரத்யேகமான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், 3.9 லிட்டர், ட்விண்டர்போசார்ஜ்ட், வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 690 பிஹெச்பியையும், 760 என்எம் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், ரியர் வீல்களுக்கு 7-ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் மூலம் பவர் மற்றும் டார்க்கை கடத்துகிறது.

திறன்;

திறன்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடுகிறது.

மேலும், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடுகிறது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், அதிகப்படியாக மணிக்கு 330 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டு திறன் கொண்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் முன்பகுதி மிகவும் கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது. மேலும், கத்தி போன்ற ஹெட்லேம்ப்கள் இதற்கு ஆக்கிரோஷமான தோற்றதை வழங்குகிறது.

இதன் ஹெட்லேம்ப்களுடன் டேடைம் ரன்னிங் எல்ஈடிக்கள் ஒருங்கிணைக்கபட்டுள்ளது. மேலும், இதன் முன் பகுதியில் உள்ள ட்யூவல் ஏர் இண்டேக்கள் ரேடியேட்டர்களுக்கு காற்றை செலுத்துகிறது.

ரியர்;

ரியர்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்காரின் பின்பகுதியில், சிங்கிள் இண்டெக்ரேட்டட் டெய்ல்லேம்ப்கள் உள்ளது. மேலும், இதன் இண்டிகேட்டர் யூனிட்கள்

வெண்ட்கள் கொண்டுள்ளது. இந்த வெண்ட்கள் இஞ்ஜின் மூலம் வெளியிடப்படும் கூடுதல் காற்றை வெளியே கடத்துகிறது.

இதோடு மட்டுமல்லாமல், இதன் ரியரில் டிஃப்யூஸர் யூனிட் மற்றும் ட்யூவல் எக்ஸ்ஹாஸ்ட்கள் உள்ளன.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஃபெராரி ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், லம்போர்கினி ஹூரகேன் மற்றும் ஆடி ஆர்8 வி10 பிளஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார், 3.38 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மீண்டும் ஏலத்திற்கு வந்த போப் ஆண்டவரின் ஃபெராரி கார்... சுவாரஸ்ய பின்னணி!

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஃபெராரி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Ferrari has launched their 488 GTB Supercar at an event held in Mumbai. Earlier, the new Ferrari supercar was launched in India on February 18 in Delhi. Ferrari 488 GTB Supercar would be competing with Lamborghini Huracan and the Audi R8 V10 Plus. Ferrari 488 GTB Supercar is priced at Rs. 3.88 crores ex-showroom (Delhi).
Story first published: Thursday, February 25, 2016, 19:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X