ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே சூப்பர்கார் அறிமுகம் செய்யபட்டுள்ளது

By Ravichandran

ஃபெராரி நிறுவனம் வழங்கும் ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே சூப்பர்கார் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபெராரி 458 ஸ்பெஷியாலே;

ஃபெராரி 458 ஸ்பெஷியாலே;

ஃபெராரி 458 ஸ்பெஷியாலே, ஃபெராரி 458 இட்டாலியா ஸ்போர்ட்ஸ் காரின், கூடுதல் செயல்திறன் கொண்ட மாடல் ஆகும்.

ஃபெராரி 458 ஸ்பெஷியாலே, இத்தாலியின் மாரநெல்லோ என்ற நகரை மையமாக கொண்டு இயங்கும் ஃபெராரி நிறுவனம் மூலம், நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் இஞ்ஜின் கொண்டு தயாரிக்கபட்ட கடைசி கார் ஆகும்.

ஃபெராரி 458 ஸ்பெஷியாலே எம்எம்;

ஃபெராரி 458 ஸ்பெஷியாலே எம்எம்;

அரிய லிமிடெட் எடிஷன் கார்களில் ஒன்றான ஃபெராரி 458 ஸ்பெஷியாலே காரை கொண்ட இங்கிலாந்தை சேர்ந்த உரிமையாளர், தனது ஃபெராரி 458 ஸ்பெஷியாலே காரை மேலும் சிறப்பானதாக மாற்ற முடிவு செய்து ஃபெராரி ஸ்பெஷல் புராஜெக்ட்ஸ் பிரிவை தொடர்பு கொண்டார்.

இது தான், தற்போது ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே என்ற ரூபம் பெற்றுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே, ஃபெராரி 458 ஸ்பெஷியாலே மாடலில் உபயோகிக்கப்பட்ட அதே 4.5 லிட்டர், வி8 இஞ்ஜின் தான் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 597 பிஹெச்பியையும், 540 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்;

முக்கிய மாற்றங்கள்;

ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே காரின் உரிமையாளர், ஃபெராரி நிறுவனம் மூலமாகவே தான் விரும்பிய மாற்றங்களை செய்து கொண்டார்.

இதன் ஏ-பில்லர் பிளாக் அவுட் செய்யபட்டுள்ளது. இதனால், இதன் முன் பகுதி வைசர் போன்ற தோற்றம் பெற்றுள்ளது. இதன் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் உள்ள பெரிய பம்பர்கள், கார்பன் ஃபைபர் மூலம் செய்யபட்டுள்ளது.

பிற மாற்றங்கள்;

பிற மாற்றங்கள்;

ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே காரில், பக்கவாட்டில் உள்ள ஏர் ஸ்கூப்களும், பின் பகுதியில் உள்ள புதிய ஸ்பாய்லர் ஆகியவை புதிதாக சேர்க்கபட்டுள்ளது.

பிற ஃபெராரி 458 ஸ்பெஷியாலே கார்களில் இருந்து தனது காரை தனியாக தெரியபடுத்தும் நோக்கில், ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே காரில், 488 ஜிடிபி மாடலின் ரியர் டெயில் லேம்ப்கள் பொருத்தபட்டுள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

கஷ்டமைஸ் செய்யப்பட்ட ஃபெராரி 458 எம்எம் ஸ்பெஷியாலே காரின் மூலம், வாடிக்கையாளர்கள் ஃபெராரி டெக்னீஷியன்களை தொடர்பு கொண்டு சரியான ரசனையுடன் முயற்சிகள் மேற்கொண்டால், தாங்கள் விரும்பும் வகையில் ஃபெராரி கார்களை மாற்றி கொள்ளலாம் என்பது உறுதியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லாஃபெராரி காரின் மீது உரிமையாளரின் புல்லரிக்க வைக்கும் பாசம்!

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஃபெராரி மாடல்களும், அதன் விலை விபரமும்!

ஃபெராரி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Ferrari 458 Speciale - hardcore version of Ferrari's 458 Italia sports car and last Ferrari, where the Maranello based carmaker fitted a naturally aspirated V8 Engine was converted into Ferrari 458 MM Speciale. British owner of this limited edition gem decided to get in touch with Ferrari's Special Projects division and made his Ferrari as one-off Ferrari 458 MM Speciale...
Story first published: Thursday, June 2, 2016, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X