ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ திட்டமிட்டதற்கு முன்னதாகவே அறிமுகம்

By Ravichandran

ஃபெராரி கார் உற்பத்தி நிறுவனம், ஜிடிசி4 லுஸ்ஸோ என்ற மாடலை, 2016 ஜெனீவா மோட்டார் ஷோவிற்கு முன்னதாகவே அறிமுகம் செய்துள்ளது.

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

ஜிடிசி4 லுஸ்ஸோ பற்றி...

ஜிடிசி4 லுஸ்ஸோ பற்றி...

இத்தாலிய கார் நிறுவனமான ஃபெராரி தயாரிக்கும் ஜிடிசி4 லுஸ்ஸோ, எஃப்எஃப் கிராண்ட் டூரர் மாடலின் பொலிவு கூட்டபட்ட வடிவமாகும்.

முன்னதாக, இந்த ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோவின் முறையான அறிமுகம், 2016 ஜெனீவா ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யபடப்போவதாக திட்டமிடபட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யபட்டுவிட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் வகை, கான்ஃபிகரேஷன் - பெட்ரோல், நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் வி12

கொள்ளளவு - 6.3 லிட்டர்

அதிகப்படியான பவர் - அதிகப்படியாக 8,000 ஆர்பிஎம்களில் 680 பிஹெச்பி

டார்க் - 5,750 ஆர்பிஎம்களில் 697 என்எம் (1,750 ஆர்பிஎம்களிலேயே 80% திறன் கிடைத்துவிடும்)

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோவின் இஞ்ஜின், 7-ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம், 4 வீல்களுக்கு பவரை செலுத்துகிறது.

எஃப்எஃப் கிராண்ட் டூரர் மாடலில் உள்ளது போன்றே, இந்த ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ மாடலிலும் அதே 4-டபுள்யூடி அல்லது 4-வீல் டிரைவ் என்றுய் அழைக்கபடும் சிஸ்டம் மூலம் தான் பவர் கடத்தபடுகிறது.

எஃப்12டிடிஎஃப் காணப்படுவது போல், ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோவிலும், ரியர் வீல்கள் ஸ்டியரிங்-கிற்கு உதவிகரமாக உள்ளது.

திறன்;

திறன்;

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.4 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ, அதிகபடியாக மணிக்கு 335 கிலோமீட்டர் வரையிலான வேக்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோவின், டிரை எடை 1790 கிலோகிராம்களாக உள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் அம்சங்களை பொருத்த வரை, ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ பெரிய அளவில் மறுவடிவமைக்கபட்டுள்ளது.

எனினும், இந்த ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ காரை உற்று கவணிக்கும் போது, இதை வடிவமைக்கும் போது, வடிவமைப்பாளர் மிகுந்த கோவத்தில் இருந்திருப்பாரோ என்று யோசிக்க வைக்கிறது.

குடும்பஸ்தர்களை கவரும் வகையில், எஃப்எஃப் கிராண்ட் டூரர் மாடலில் காணமுடிந்த வளைவு நெளிவுகள் கொண்ட தோற்றங்கள் எல்லாம் மாறிவிட்டது. ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ மிகுந்த ஆக்ரோஷமான, கூர்மையான மற்றும் செதுக்கபட்டது போன்ற தோற்றம் கொண்டுள்ளாது.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ காரின் ஃப்ரண்ட் பகுதியில், ஒருங்கிணைந்த வகையிலான பெரிய ஏர் இன்-டேக்கள் உள்ளன. இது இஞ்ஜினுக்கு கூடுதலான ஏர்-ஃப்ளோவை கூட்டுகிறது.

ரியர்;

ரியர்;

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ காரின் ரியர் பகுதியில், புதிய டெய்ல்லைட்கள், மறுவடிவமைக்கபட்ட டிஃப்யூஸர் மற்றும் ரூஃப் மவுண்டட் ஸ்பாய்ளர் ஆகிய அம்சங்கள் உள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ காரின் உட்பகுதியில், டெல்ஃபி நிறுவனம் வழங்கும் ஆப்பிள் கார் பிளே உடைய 10.25 இஞ்ச் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

மேலும், இந்த மாடலில் பெராரி ட்யூவல் காக்பிட்-டும் உள்ளது.

பெராரி கார்களில் முதன்முறையாக, இந்த ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ மாடலில் தான் ஜி-மீட்டர் பொருத்தபட்டுள்ளது.

அறிமுகம்?

அறிமுகம்?

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ, 2016 ஜெனீவா ஆட்டோ ஷோவில் முறைப்படி அறிமுகம் செய்யபடும் என ஃபெராரி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர்கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

லாஃபெராரி காரின் மீது உரிமையாளரின் புல்லரிக்க வைக்கும் பாசம்!

ஃபெராரி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Ferrari has unveiled their the GTC4 Lusso. This is facelifted successor to the FF grand tourer. Ferrari GTC4 Lusso was unveiled ahead of its official debut at the 2016 Geneva Auto Show. Ferrari has confirmed that their GTC4 Lusso would be officially introduced at the 2016 Geneva Auto Show. The other details are yet to be known.
Story first published: Monday, February 22, 2016, 17:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X