ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு

Written By:

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள தேதி வெளியாகியுள்ளது.

இத்தாலிய கார் உற்பத்தி நிறுவனமான ஃபியட், தாங்கள் தயாரித்து வழங்கும் ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலை, இந்திய வாகன சந்தைகளில், இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஃபியட் நிறுவனம், இந்த அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலை, கான்செப்ட் வடிவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தனர்.

fiat-avventura-urban-cross-india-launch-date-revealed-now

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலானது, தற்போது இந்திய சாலைகளில் செல்லும் அவென்ச்சுரா கிராஸ் ஓவர் காரின், முரட்டுத்தனம் சற்று குறைந்த வடிவம் போல் காட்சி அளிக்கிறது.

ஃபியட் அவென்ச்சுரா கான்செப்ட் வழக்கமான மாடலை காட்டிலும், சற்று பணக்காரத்தனமானது போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இது டியூவல் பெயின்ட் வேலைப்பாடு, எல்இடி ஹெட்லைட்கள், ஃபால்லோ மீ ஹேட்லேம்ப்கள், ஓஆர்விஎம் டர்ன் இண்டிகேட்டர்கள், பனோராமிக் சன்ரூஃப், ரெட் ஆக்சென்ட்கள் உடைய 17-இஞ்ச் அல்லாய் வீல்கள், எல்இடி ஆப்டிக்கல் கைட் உடைய டெயில்லேம்ப்கள் கொண்டுள்ளது. மேலும், இது டியூவல் டோன் இன்டீரியர் கொண்டுள்ளது.

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் காரின் உற்பத்தி நிலை மாடல், அறிமுகம் செய்யப்படும் போது, இதில் தாம்-தூம் என சேர்க்கபட்டிருந்த சில கூடுதல் ஆடம்பர அம்சங்கள் விளக்கி கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ், 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 138 பிஹெச்பியையும், 210 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

English summary
Italian carmaker Fiat is all set to launch their Avventura Urban Cross in India during this festive season. Fiat unveiled this Avventura Urban Coss as concept model at 2016 Delhi Auto Expo. Fiat Avventura Urban Cross looks like less rugged version of Avventura crossover. Powering new Avventura is 1.4-litre T-Jet petrol engine, which produces 138bhp and 210Nm of torque...
Story first published: Saturday, July 2, 2016, 11:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more