ஃபியட் இந்தியா வழங்கும் பண்டிகைக்கால சலுகைகள்

Written By:

ஃபியட் இந்தியா நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளனர். தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால கொண்டாட்டங்கள் இந்த அக்டோபர் மாதத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. இதற்காக, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்த அக்டோபர் மாதத்தில் ஏராளமான சலுகைகளை வழங்குகின்றனர்.

ஃபியட் இந்தியா நிறுவனம் வழங்கும் பண்டிகைக்கால சலுகைகள் தொடர்புடைய தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம், ஃபியட் புன்ட்டோ எவோ, ஃபியட் லீனியா, ஃபியட் லீனியா கிளாஸிக் மற்றும் ஃபியட் அவென்ச்சுரா ஆகிய நான்கு மாடல்கள் மீது சலுகைகள் அளிக்கின்றது. இந்த பண்டிகை காலக்கட்டத்தில், வாடிக்கையாளர்கள் அதிகப்படியாக 85,000 ரூபாய் வரையிலான ஆதாயங்களை பெறலாம்.

புன்ட்டோ எவோ;

புன்ட்டோ எவோ;

ஃபியட் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக், 5.86 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) துவக்க விலையில் இருந்து கிடைக்கிறது. ஃபியட் இந்தியா நிறுவனம், இந்த புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் மீது அதிகப்படியாக 60,000 ரூபாய் வரையிலான ஆதாயங்களை அளிக்கின்றனர். புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் இரண்டுமே சலுகைகள் மற்றும் ஆதயங்களுடன் கிடைக்கும்.

லீனியா;

லீனியா;

ஃபியட் லீனியா செடான் மீது உச்சபட்சமாக 60,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்கிறது. ஃபியட் லீனியா செடான், 7.82 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும்.

லீனியா கிளாஸிக்;

லீனியா கிளாஸிக்;

ஃபியட் லீனியா கிளாஸிக் மாடல் மீது 65,000 வரையிலான ஆதாயங்கள் கொடுக்கப்படுகிறது. ஃபியட் லீனியா கிளாஸிக் 6.46 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) துவக்க விலையில் இருந்து விற்கப்படுகிறது.

ஃபியட் அவென்ச்சுரா;

ஃபியட் அவென்ச்சுரா;

ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மாடல் மீது தான் ஃபியட் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியாக 85,000 ரூபாய் வரையிலான சலுகைகளை பெறலாம். இந்த ஃபியட் அவென்ச்சுரா மாடல், 7.87 என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும்.

சலுகைகள் இல்லாத மாடல்கள்;

சலுகைகள் இல்லாத மாடல்கள்;

ஃபியட் இந்தியா நிறுவனம், அபார்த் தயாரிப்புகள் மீதும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபியட் அர்பன் கிராஸ் ஆகிய மாடல்கள் மீது எந்த விதமான சலுகைகளையும் அறிவிக்கவில்லை. ஃபியட் அர்பன் கிராஸ், 6.85 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) துவக்க விலையில் இருந்து விற்கப்படும்.

மேலும்... #ஃபியட் #fiat
English summary
Fiat India has announced its offers and benefits for 2016 festive season. Only four models namely Punto Evo hatchback, Linea sedan, Linea Classic and Fiat Avventura crossover are bundled with offers and benefits from Italian-based automobile manufacturer. Customers can avail maximum benefit worth upto Rs. 85,000 during October 2016. To know more, check here...
Story first published: Thursday, October 6, 2016, 7:05 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos