ஃபியட் லாயல்டி கேம்ப் என்ற சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவக்கம்

Written By:

ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், இந்தியாவில் ஃபியட் லாயல்டி கேம்ப் என்ற பெயரில் 2-வது சர்வீஸ் கேம்பை நடத்துகின்றனர். பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக சர்வீஸ் கேம்ப்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில், ஃபியட் நிறுவனமும் தற்போது சர்வீஸ் முகாம்களை நடத்துகிறது.

ஃபியட் லாயல்டி கேம்ப் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

லாயல்டி கேம்ப்;

லாயல்டி கேம்ப்;

ஃபியட் லாயல்டி கேம்ப், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஃபியட் டீலர்ஷிப்களிலும் செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வாடிக்கையாளர்களும், இந்த ஃபியட் லாயல்டி கேம்ப்பில் தங்களின் வாகனங்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

சலுகைகள்;

சலுகைகள்;

ஃபியட் லாயல்டி கேம்ப்பில் பங்குபெறும் வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) மீது 15% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும், மெக்கானிகல் ரிப்பேர் பணிகள் மீது லேபர் சார்ஜ்ஜின் மீது 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

50 பாயின்ட் செக்கப்;

50 பாயின்ட் செக்கப்;

க்கையாளர்களின் கார்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய, டெக்னீஷியன்கள் 50 பாயின்ட் சேக்கப்பையும் செய்கின்றனர்.

பிற சலுகைகள்;

பிற சலுகைகள்;

2-வது ஃபியட் லாயல்டி கேம்ப்பில் பங்குபெற கொண்டு வரப்படும் வாடிக்கையாளர்களின் கார்களுக்கு இலவச டாப் வாஷ் செய்து தரப்படும். வருங்காலத்தில், எந்த விதமான சிக்கல்களும் எழாமல் இருக்கும் பேட்டரிகளின் சோதனைகளும் செய்து தரப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட ஃபியட் டீலர்ஷிப்கள் மட்டுமே இந்த லாயல்டி கம்பை நடத்துகின்றனர்.

தற்போதைய தயாரிப்புகள்;

தற்போதைய தயாரிப்புகள்;

தற்போதைய நிலையில், ஃபியட் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் புன்ட்டோ ப்யூர், புன்ட்டோ எவோ, அபாரத் புன்ட்டோ, அவென்ச்சுரா, லீனியா, லீனியா கிளாசிக் மற்றும் அபாரத் ஆகிய மாடல்களை இந்தியாவில் வழங்குகின்றனர்.

வருங்கால அறிமுகம்;

வருங்கால அறிமுகம்;

ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், அடுத்ததாக ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர். இதற்கான முறையான புக்கிங், இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் புக்கிங் துவங்கியது

செப்டம்பர் மாதத்தில் ஃபியட் நிறுவனம் வழங்கும் பக்கா சலுகைகள்

செப்டம்பரில் கார், டூ வீலர்கள் மீது அட்டகாசமான சலுகைகள்

மேலும்... #ஃபியட் #fiat
English summary
Fiat Chrysler Automobiles is organising service camp for its Indian customers named as Fiat Loyalty Camp. This Fiat Loyalty Camp is held across all Fiat India dealerships from September 19 to 25, 2016. Fiat vehicle owners in India can avail service and benefit at the Loyalty Camp. Fifteen percent discount is offered on spare parts and Labour charge. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark